முகப்பு
செய்திகள்

மாவீரனில் முரட்டு வில்லன்: மிஷ்கின்

மாவீரன் திரைப்படத்தில் தன் கதாபாத்திரம் குறித்து இயக்குநர் மிஷ்கின் தெரிவித்துள்ளார்.

Updated On : 1 ஜூன், 2023 at 4:15 PM
பகிர்:

மாவீரன் திரைப்படத்தில் தன் கதாபாத்திரம் குறித்து இயக்குநர் மிஷ்கின் தெரிவித்துள்ளார்.

இயக்குநர் மடோன் அஸ்வின் இயக்கத்தில் சிவகார்த்திகேயன் நடிப்பில் உருவாகிவரும் திரைப்படம் மாவீரன். இப்படத்தின் நாயகியாக அதிதி ஷங்கர் நடிக்கிறார். முக்கிய கதாபாத்திரங்களில் மிஷ்கின், சரிதா, யோகிபாபு போன்றோர் நடிக்கிறார்கள்.  இப்படத்திற்கு பரத் சங்கர் இசையமைக்கிறார்.

மடோன் அஸ்வின் இயக்கிய மண்டேலா படத்தில் யோகிபாபு கதாநாயகனாக நடித்தார். இந்தப் படம் தேசிய விருது வாங்கியது. விமர்சன ரீதியாகவும் நல்ல வரவேற்பினை பெற்றது குறிப்பிடத்தக்கது.

Advertisement

மாவீரன் திரைப்படம், ஜூலை 14 ஆம் தேதி வெளியாகிறது. இந்நிலையில், நேர்காணல் ஒன்றில் இயக்குநர் மிஷ்கின் , ‘மாவீரன் படத்தில் வேஷ்டி சட்டையில் சிவகார்த்திகேயனுடன் கடுமையாக மோதும் முரட்டு வில்லனாக நடிக்கிறேன்’ எனத் தெரிவித்துள்ளார்.

நடிகர் விஜய் நடிப்பில் உருவாகி வரும் ‘லியோ’ படத்திலும் மிஷ்கின் வில்லனாக நடித்திருப்பது குறிப்பிடத்தக்கது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.