நடிகர் பிரபு தேவாவின் புதிய படம் குறித்து அறிவிப்பு வெளியாகியுள்ளது.
நடன இயக்குநராக இருந்து நடிகராக, இயக்குநராக என பாலிவுட் வரை வெற்றிகரமாக வலம் வந்தவர் பிரபு தேவா. சமீப காலமாக படங்களை இயக்குவதை விடுத்து நாயகனாக நடித்து வருகிறார். தமிழில் இவர் நடிப்பில் இறுதியாக வெளியான பொய்க்கால் குதிரை, பாகீரா ஆகிய படங்கள் கலவையான விமர்சனங்களைப் பெற்றது.
இதையும் படிக்க: இயக்குநர் சுசீந்திரன் படப்பிடிப்பில் விபத்து
இந்நிலையில், பிரபுதேவா பிரபல மலையாள இயக்குநர் எஸ்.ஜே சினுவுடன் 'பேட்ட ராப்' என்று பெயரிடப்பட்டுள்ள பரபரப்பான, கலகலப்பான, நகைச்சுவை நிரம்பிய, பொழுதுபோக்கு அம்சங்கள் மிக்க திரைப்படத்திற்காக இணைந்துள்ளார்.
புளூ ஹில் பிலிம்ஸ் பேனரில் ஜோபி பி.சாம் தயாரிக்கும் இப்படம் சென்னையில் பூஜையுடன் துவங்கியது. டி.இமான் இசைமைக்கிறார்.
நடிகை வேதிகா கதாநாயகியாகவும் விவேக் பிரசன்னா, பகவதி பெருமாள், ரமேஷ் திலக், ராஜீவ் பிள்ளை, கலாபவன் ஷாஜோன், மைம் கோபி மற்றும் ரியாஸ் கான் ஆகியோர் முக்கிய கதாபாத்திரத்திலும் நடிக்கின்றனர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.