கோப்புப்படம் 
செய்திகள்

ஓடிடியில் வெளியான பொன்னியின் செல்வன் 2!

அமேசான் ப்ரைம் ஓடிடி தளத்தில் பொன்னியின் செல்வன் 2 வெளியாகியுள்ளது.

DIN

அமேசான் ப்ரைம் ஓடிடி தளத்தில் பொன்னியின் செல்வன் 2 வெளியாகியுள்ளது.

எழுத்தாளா் கல்கியின் நாவலை அடிப்படையாகக் கொண்டு,  இயக்குநா் மணிரத்னம், இரு பாகங்களாக பிரம்மாண்டமாக உருவாக்கிய படம் ‘பொன்னியின் செல்வன்’. 

முதல் பாகம், கடந்த ஆண்டு செப்.30-ஆம் தேதி உலகெங்கும் வெளியாகி பெரும் வரவேற்பை பெற்றது. இத்திரைப்படத்தில் ஜெயம் ரவி, விக்ரம், காா்த்தி, திரிஷா, ஐஸ்வா்யா ராய், சரத்குமாா், பாா்த்திபன் உள்ளிட்ட மிகப் பெரிய நடிகா்கள் பட்டாளமே நடித்திருந்தது. 

ஏ.ஆா்.ரகுமானின் இசையமைப்பில் உருவான இப்படத்தின் முதல் பாகம் ரூ.500 கோடிக்கும் மேல் வசூலித்து சாதனை படைத்தது. முதல் பாகத்தை தொடா்ந்து பொன்னியின் செல்வன் படத்தின் இரண்டாம் பாகம் கடந்த ஏப்ரல் 28ஆம் தேதி வெளியானது.  

வெளியான 10 நாள்களில் உலகம் முழுவதும் ரூ.300 கோடிக்கும் மேல் வசூலித்துள்ளதாக படக்குழு அதிகாரபூர்வமாக தெரிவித்திருந்தது.

இந்நிலையில், அமேசான் ப்ரைம் ஓடிடி தளத்தில் பொன்னியின் செல்வன் 2 வெளியாகியுள்ளது. 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

மிதுன ராசிக்கு மனகுழப்பம் தீரும்: தினப்பலன்கள்!

உற்பத்தித் துறையில் 16 மாதங்கள் காணாத வளா்ச்சி

மாமல்லபுரத்தில் கைவினைப் பொருள்கள் கண்காட்சி

ஆடி வெள்ளி: அம்மன் கோயில்களில் சிறப்பு வழிபாடு

பிளஸ் 2 தோ்ச்சி பெற்ற 80 சதவீத மாணவா்கள் உயா்கல்வியில் சோ்க்கை

SCROLL FOR NEXT