முகப்பு
செய்திகள்

விஜய் தேவரகொண்டா குறித்து சமந்தா நெகிழ்ச்சிப் பதிவு!

விஜய் தேவரகொண்டா குறித்து சமந்தா நெகிழ்ச்சிப் பதிவு ஒன்றை இன்ஸ்டாகிராமில் தெரிவித்துள்ளார்.

செய்திகள்

விஜய் தேவரகொண்டா குறித்து சமந்தா நெகிழ்ச்சிப் பதிவு!

விஜய் தேவரகொண்டா குறித்து சமந்தா நெகிழ்ச்சிப் பதிவு ஒன்றை இன்ஸ்டாகிராமில் தெரிவித்துள்ளார்.

Updated On : 1 பிப்ரவரி, 2024 at 7:02 PM
பகிர்:

விஜய் தேவரகொண்டா குறித்து சமந்தா நெகிழ்ச்சிப் பதிவு ஒன்றை இன்ஸ்டாகிராமில் தெரிவித்துள்ளார்.

தமிழ், தெலுங்கு, ஹிந்தி என இந்திய அளவில் பிரபல நடிகையாக இருக்கும் சமந்தா சமீபத்தில் மயோசிடிஸ் எனும் அரிய வகை தசை அழற்சி நோயினால் பாதிக்கப்பட்டுள்ளதாக தெரிவித்து ரசிகர்களை அதிர்ச்சியில் ஆழ்த்தினார். பின்னர் அதிலிருந்து மீண்டு, பின்னர் படங்களில் நடித்து வருகிறார்.

யசோதா, சாகுந்தலம் படங்களைத் தொடர்ந்து, விஜய் தேவரகொண்டாவுடன் சமந்தா குஷி என்ற தெலுங்கு படத்தில் நடித்து வருகிறார். இப்படத்தின் படப்பிடிப்பு துருக்கியில் நடைபெற்று வரும் நிலையில், படப்பிடிப்பு இல்லாத நேரத்தில் விஜய் தேவரகொண்டாவுடன் மகிழ்ச்சியாக வெளியே சுற்றி வருகிறார்.

சமந்தா தனது இன்ஸ்டாகிராம் கிராம் பக்கத்தில் விஜய் தேவரகொண்டாவுடன் எடுத்துக் கொண்ட புகைப்படங்களையும் பகிர்ந்து வருகிறார். விஜய் தேவரகொண்டாவை பற்றி  நெகிழ்ச்சியான பதிவு ஒன்றை சமந்தா வெளியிட்டுள்ளார்.

அதில், உங்களுடைய சிறந்ததையும் பார்த்து உள்ளேன், உங்களுடைய மோசமானதையும் பார்த்து உள்ளேன். நீங்கள் கடைசியாக வந்ததையும் பார்த்து உள்ளேன். முதலாக வந்ததையும் பார்த்து உள்ளேன். உங்களுடைய ஏற்ற, இறக்கங்களை பார்த்து உள்ளேன். சில நண்பர்கள் மட்டுமே அன்புக்காக உடன் இருப்பார்கள் எனத் தெரிவித்தார்.

முழு கட்டுரையைப் படிக்க →