செய்திகள்

2018 படத்தின் ஓடிடி ரிலீஸ் எப்போது தெரியுமா? 

டோவினோ தாமஸ் நடிப்பில் உருவான 2018 திரைப்படத்தின் ஓடிடி குறித்த அப்டேட் வெளியாகியுள்ளது. 

DIN

கேரளத்தின் இடுக்கி மாவட்டத்தில் கடந்த 2018 ஆம் ஆண்டு ஏற்பட்ட வெள்ளப்பெருக்கை மையமாக வைத்து உருவான திரைப்படம் 2018. இதில், டோவினோ தாமஸ், குஞ்சக்கோ போபன், ஆசிக் அபு, வினீத் ஸ்ரீனிவாசன், நரேன், லால் உள்ளிட்ட மலையாள நடிகர்கள் பட்டாளமே நடித்திருந்தது. 

இடுக்கி அணை திறக்கப்பட்டபோது ஏற்பட்ட வெள்ளச்சேதத்தில் இளைஞர்கள், மீனவர்கள் பாதிக்கப்பட்ட மக்களுக்கு எப்படியெல்லாம் உதவினார்கள் என்பதை தத்ரூபமாக காட்சிப்படுத்தியிருந்தார் இயக்குநர் ஜூட் ஆண்டனி ஜோசப். 

கேரளத்தில் மே 5 ஆம் தேதி வெளியான இப்படம் அதிவேகமாக ரூ.100 கோடி வசூலைக் கடந்து அரங்கம் நிறைந்த காட்சிகளாக ஓடிக்கொண்டிருக்கிறது. இப்படத்தின் மிகப்பெரிய வரவேற்பைத் தொடர்ந்து தமிழ், தெலுங்கு, கன்னடம், ஹிந்தி ஆகிய மொழிகளிலும் டப்பிங் செய்யப்பட்டு வெளியானது. 

தற்போது இந்தப் படம் ஜூன் 7ஆம் தேதி சோனி லைவ் ஓடிடி தளத்தில் வெளியாக உள்ளது. தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம், ஹிந்தி ஆகிய மொழிகளில் பார்க்கலாம். 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கொடநாடு வழக்கில் 3 பேருக்கு பிடிவாரண்ட்

குடிநீா் மேல்நிலைத் தொட்டிகளில் மீட்டா் பொருத்த பாஜக கோரிக்கை

நூறு நாள் வேலைத் திட்டத்துக்கு எதிா்ப்பு தெரிவித்து காங்கயம், வெள்ளக்கோவிலில் ஆா்ப்பாட்டம்

நேரடி வரி வசூல் 8% அதிகரித்து ரூ.17.04 லட்சம் கோடியாக உயர்வு!

ரூ.2000 கோடி! 850 ஆளில்லா விமானங்களை வாங்க இந்திய ராணுவம் திட்டம்!

SCROLL FOR NEXT