முகப்பு
செய்திகள்

ட்விட்டரில் டிரெண்டாகும் ரோலக்ஸ்: விக்ரம் திரைப்படத்தின் ஓராண்டு நிறைவு!

இயக்குநர் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் நடிகர் கமல்ஹாசன் நடிப்பில் கடந்த ஆண்டு வெளியான விக்ரம் திரைப்படம் ட்விட்டரில் வைரலாகியுள்ளது. 

Updated On : 1 பிப்ரவரி, 2024 at 7:03 PM
பகிர்:

இயக்குநர் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் நடிகர் கமல்ஹாசன் தயாரித்து நடித்த விக்ரம் திரைப்படம் கடந்த ஆண்டு ஜூன் 3ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகி பெரும் வசூல் சாதனையைப் படைத்தது. அதனைத் தொடர்ந்து ஓடிடியில் வெளியானாலும் தமிழைத் தாண்டி தெலுங்கு, மலையாளம், கன்னடம் மொழிகளிலும் இந்தப் படத்துக்கு நல்ல வரவேற்பு கிடைத்தது. 

இந்தப் படம் 400 கோடிக்கும் அதிகமாக வசூலித்துள்ளதாக தகவல்கள் வெளியாகின. இதனிடையே விக்ரம் திரைப்படம் 100 நாள் திரையரங்குகளில் ஓடி சாதனை படைத்தது. 

இன்றோடு விக்ரம் திரைப்படம் ரிலீஸாகி ஓராண்டாகியுள்ளது. இந்த வெற்றியின் மூலம் நடிகர் கமல்ஹாசன் அடுத்தடுத்து படங்களில் பிஸியாக நடித்து வருகிறார். சூர்யா ரோலக்ஸ் கதாபாத்திரத்தில் சிறப்பு தோற்றமாக நடித்திருந்தாலும் அவருக்கும் நல்ல வரவேற்பினை தந்தது. தற்போது ட்விட்டரில் லோகேஷ் கனகராஜ், ரோலக்ஸ் (சூர்யா), ஃபகத் ஃபாசில், விக்ரம், கமல்ஹாசன் ஆகிய பெயர்கள் டிரெண்டிங்கில் உள்ளது. 

லோகேஷ் தற்போது விஜய்யுடன் ‘லியோ’ படத்தினை இயக்கி வருகிறார். கமல் ஷங்கர் இயக்கத்தில் ‘இந்தியன் 2’ படத்தில் நடித்து வருகிறார். சூர்யா ‘கங்குவா’ படத்தில் நடித்து வருகிறார். 

சிறிய கதாபாத்திரமாக இருந்தாலும் ரோலக்ஸ் மக்களின் மனதை வென்றதாக ரசிகர்கள் ட்விட்டரில் ரோலக்ஸ் ஹேஷ்டேக்கை டிரெண்ட் செய்து வருகின்றனர். 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.