முகப்பு
செய்திகள்

விடாமுயற்சி படப்பிடிப்பு தேதி குறித்து தகவல்!

விடாமுயற்சி படத்தின் படப்பிடிப்பு தேதி குறித்து புதிய தகவல் வெளியாகியுள்ளது.

Updated On : 1 பிப்ரவரி, 2024 at 7:03 PM
பகிர்:


விடாமுயற்சி படத்தின் படப்பிடிப்பு தேதி குறித்து புதிய தகவல் வெளியாகியுள்ளது.

துணிவு படத்தைத் தொடர்ந்து அஜித்தின் புதிய படத்தை யார் இயக்குவார் என்கிற எதிர்பார்ப்பு ரசிகர்கள் மத்தியில் இருந்தது. அந்த எதிர்பார்ப்புக்கு  அஜித் குமாரின் பிறந்தநாளை முன்னிட்டு கடந்த மே 1 ஆம் தேதி அவரின் புதிய படம் குறித்த அதிகாரபூர்வ அறிவிப்பு வெளியானது.

அதன்படி, அஜித்தின் அடுத்தப் படத்தை இயக்குநர் மகிழ் திருமேனி இயக்குவார் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் படத்துக்கு விடாமுயற்சி எனவும் தலைப்பு வைத்துள்ளனர். லைகா நிறுவனம் தயாரிக்கும் இந்த படத்துக்கு அனிருத் இசையமைக்கிறார். நிரவ் ஷா ஒளிப்பதிவு செய்கிறார்.

இந்நிலையில், இப்படத்தின் படப்பிடிப்பானது இந்த வாரம் புணேவில் தொடங்கவுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.

மேலும், அக்டோபர் மாதம் படப்பிடிப்பு முடிவடைந்து அடுத்தாண்டு தொடக்கத்தில் திரைக்கு வர வாய்ப்புள்ளதாகவும் கூறப்படுவதால், அஜித் ரசிகர்கள் உற்சாகமடைந்துள்ளனர்.

முழு கட்டுரையைப் படிக்க →