செய்திகள்

ஆதிபுருஷ் வெளியாகும் திரையரங்குகளில் அனுமனுக்காக ஒரு சீட் காலியாக விடப்படும்!

நடிகர் பிரபாஸின் ஆதிபுருஷ் திரைப்படம் வெளியாகும் திரையரங்குகளில் அனுமனுக்காக ஒரு சீட் காலியாக விடப்படும் என்று படக்குழு அறிவித்துள்ளது.

DIN

நடிகர் பிரபாஸின் ஆதிபுருஷ் திரைப்படம் வெளியாகும் திரையரங்குகளில் அனுமனுக்காக ஒரு சீட் காலியாக விடப்படும் என்று படக்குழு அறிவித்துள்ளது.

பாகுபலி 2 படத்துக்குப் பிறகு சாஹோ, ராதே ஷ்யாம்  ஆகிய படங்களில் நடித்தார் பிரபாஸ். பாகுபலி 2 படத்துக்கு அடுத்து பிரபாஸ் நடிக்கும் அனைத்து படங்களும் ஹிந்தியிலும் வெளியாகும் விதத்தில் உருவாக்கப்பட்டு வருகின்றன.

தன்ஹாஜி படத்தை இயக்கிய ஓம் ராவுத் இயக்கத்தில் ஆதிபுருஷ் என்கிற 3டி படத்தில் பிரபல பாலிவுட் நடிகர் சயிப் அலி கானுடன் இணைந்து நடித்துள்ளார் பிரபாஸ்.

ஹிந்தி, தெலுங்கில் உருவாகும் இப்படம் தமிழ், மலையாளம், கன்னடம் மொழிகளிலும் வெளியாகவுள்ளது. ஆதிபுருஷ் படம் 2023, ஜனவரி 12-ல் வெளியாகும் என முதலில் அறிவிக்கப்பட்டிருந்தது. 

ஆனால், கடந்த 2022-ல் வெளியான ஆதிபுருஷ் படத்தின் டீசரின் கிராபிக்ஸ், ஸ்பெஷல் எஃபெக்ட்ஸ் காட்சிகளை ரசிகர்கள் விமர்சனம் செய்தார்கள். 

இதனைத் தொடர்ந்து, ஆதிபுருஷ் படத்தின் சில காட்சிகள் மீண்டும் படப்பிடிப்பு செய்து கிராபிக்ஸ் செய்யப்பட்டதை தொடர்ந்து, 2023 ஜூன் 16 வெளியாகும் என தெரிவிக்கப்பட்டு படத்தின் புதிய டிரைலரும் வெளியாகி வரவேற்பை பெற்றுள்ளது.

இந்நிலையில், ஆதிபுரூஷ் படம் வெளியாகும் திரையரங்குகளில் அனைத்துக் காட்சிகளிலும் ஒரு சீட் காலியாக விடப்படும் என்று படக்குழுவினர் அறிவித்துள்ளனர்.

இதனை வரவேற்றும், விமர்சித்தும் சமூக வலைதளங்களில் சினிமா ரசிகர்கள் பகிர்ந்து வருகின்றனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

ஹீரோவின் இரண்டு புதிய பைக்குகள்! குறைந்த விலையில்...

செய்யறிவுத் துறைக்குள் நுழைவது எப்படி? ரூ.3.36 கோடி சம்பளத்தை மறுத்த இளைஞர் பதில்!

நெல்லுக்கான ஆதார விலை ரூ.2500 ஆக உயர்வு: தமிழக அரசாணை வெளியீடு

பிறந்த நாளில் நற்செய்தி: விஷால் - தன்ஷிகா நிச்சயதார்த்தம்!

காலவரையற்ற உண்ணாவிரதம் போராட்டத்தில் ஈடுபட்ட எம்.பி. சசிகாந்த் செந்தில்!

SCROLL FOR NEXT