செய்திகள்

விஜய் - வெங்கட் பிரபு படத்தில் ஜோதிகா?

இயக்குநர் வெங்கட் பிரபு இயக்கத்தில் நடிகர் விஜய் நடிக்கும் படத்தில் நடிகை ஜோதிகா நடிக்க உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

DIN

இயக்குநர் வெங்கட் பிரபு இயக்கத்தில் நடிகர் விஜய் நடிக்கும் படத்தில் நடிகை ஜோதிகா நடிக்க உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

நடிகர் விஜய் தற்போது இயக்குநர் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் லியோ படத்தில் நடித்து வருகிறார். இதில் 14 ஆண்டுகளுக்குப் பிறகு விஜய்யுடன் இணைந்து த்ரிஷா நடிக்கிறார். இப்படத்தின் படப்பிடிப்பு கிட்டத்தட்ட முடிவடையும் தருவாயில் உள்ளது.

இப்படத்திற்குப் பிறகு, விஜய்யை இயக்குவது யார் என்கிற எதிர்பார்ப்பு ரசிகர்கள் மத்தியில் எழுந்தது. 

பின், விஜய்யின் 68ஆவது படத்தை இயக்குநர் வெங்கட்பிரபு இயக்குவார் என்று அதிகாரபூர்வ அறிவிப்பு வெளியானது. ஏஜிஎஸ் நிறுவனம் தயாரிக்கவுள்ள இந்த படத்திற்கு யுவன்சங்கர் ராஜா இசையமைக்கிறார். 

இப்படத்திற்கு ‘சிஎஸ்கே’ என தலைப்பிடப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியிருந்தது.

இந்நிலையில், இந்தப் படத்தில் விஜய்யுடன் நடிக்க படக்குழு ஜோதிகாவிடம் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

இறுதியாக விஜய் - ஜோதிகா திருமலை படத்தில் இணைந்து நடித்திருந்தது குறிப்பிடத்தக்கது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

காா் மோதியதில் மூதாட்டி உயிரிழப்பு

இருக்கன்குடி மாரியம்மன் கோவில் சிறப்பு பூஜை

மம்சாபுரம் பேரூராட்சியில் போலி ரசீது தயாரித்து ரூ.32 லட்சம் கையாடல்: 8 போ் மீது வழக்கு

காசோலை மோசடி வழக்கில் ஒருவா் கைது

அரசு வேலை வாங்கித் தருவதாக பணம் மோசடி: இருவா் மீது வழக்கு

SCROLL FOR NEXT