செய்திகள்

மகன்களைக் கொஞ்சும் நயன்தாரா.. வைரல் புகைப்படங்கள்!

தன் குழந்தைகளுடன் இருக்கும் புகைப்படத்தை பகிர்ந்துள்ளார் நடிகை நயன்தாரா.

DIN

தன் குழந்தைகளுடன் இருக்கும் புகைப்படத்தை பகிர்ந்துள்ளார் நடிகை நயன்தாரா.

மலையாளத்தில் கடந்த 2003 ஆம் ஆண்டு மனசினக்கரே என்ற படத்தின் மூலம் அறிமுகமாயிருந்தார் நயன்தாரா. ஆனால், அப்படம் பெரிதாகக் கைகொடுக்கவில்லை. தொடர்ந்து 2005ல் தமிழில் சரத்குமார் நடிப்பில் வெளியான ஐயா படத்தில் நாயகியாக நடித்து பாராட்டுக்களைப் பெற்றார்.

அதன்பின் நடிகர்கள் விஜய், அஜித், சூர்யா என முன்னணி நடிகர்களுடன் நடித்து தனக்கான இடத்தைப் பிடித்தார். தனிப்பட்ட வாழ்வில் ஏற்பட்ட நெருக்கடிகளால் சினிமாவை விட்டு விலகியிருந்தவர் அட்லி இயக்கத்தில் வெளியான ராஜா ராணி படத்தின் மூலம் நாயகியாக மிகப்பெரிய வருகையை பதிவு செய்து தென்னிந்தியாவில் அதிக சம்பளம் வாங்கும் நடிகையாக உருவெடுத்தார்.

ஒரு படத்திற்கு ரூ.5 கோடியிலிருந்து ரூ.10 கோடி வரை சம்பளம் கேட்கும் நயன் தற்போது ஷாருக்கானுடன் ஜவான் படத்தில் நடித்து முடித்துள்ளார்.

இவர் இயக்குநர் விக்னேஷ் சிவனை கடந்த ஆண்டு ஜூன் 9 ஆம் தேதி திருமணம் செய்துகொண்டார். இத்தம்பதியினர், வாடகைத்தாய் மூலம் இரண்டு ஆண் குழந்தைகளைப் பெற்று பெற்றோர்களாகவும் இருக்கின்றனர். 

இந்நிலையில், நடிகை நயன்தாரா தன் மகன்களைக் கொஞ்சும் புகைப்படங்கள் இணையத்தில் வெளியாகி ரசிகர்களைக் கவர்ந்து வருகிறது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

செப்டம்பர் மாத எண்கணித பலன்கள் - 9

செப்டம்பர் மாத எண்கணித பலன்கள் - 8

செப்டம்பர் மாத எண்கணித பலன்கள் - 7

செப்டம்பர் மாத எண்கணித பலன்கள் - 6

செப்டம்பர் மாத எண்கணித பலன்கள் - 5

SCROLL FOR NEXT