செய்திகள்

இசையமைப்பாளராக அறிமுகமாகும் ஏ.ஆர்.ரஹ்மானின் மகள்!

பாடகியும், ஏ.ஆர்.ரஹ்மானின் மூத்த மகளுமான கதீஜா இசையமைப்பாளராக அறிமுகமாக உள்ளார்.

DIN

பாடகியும், ஏ.ஆர்.ரஹ்மானின் மூத்த மகளுமான கதீஜா இசையமைப்பாளராக அறிமுகமாக உள்ளார்.

கதீஜா, தற்போது மின்மினி என்ற படத்திற்கு இசையமைத்து வருகிறார். இப்படத்தை சில்லுக்கருப்பட்டி, ஏலே படத்தை இயக்கிய ஹலிதா ஷமீம் இயக்கி வருகிறார்.

ஹலிதா ஷமீம் தனது சமூக வலைதளத்தில், "மின்மினி படத்திற்காக கதீஜாவுடன் பணியாற்றுவது மிக்க மகிழ்ச்சி. இவர் மிகவும் அசாதாரமான திறமைசாலி, பாடகி மட்டுமில்லாமல் சிறந்த இசையமைப்பாளரும் கூட. மின்மினி படத்திற்கு சிறந்த இசை உருவாகி கொண்டிருக்கிறது" என அவருடன் இருக்கும் புகைப்படத்தைப் பகிர்ந்து பதிவிட்டுள்ளார்.

மின்மினி படத்தின் படப்பிடிப்பு 2015-ல் தொடங்கிய நிலையில், ஏழு ஆண்டுகளாக ஹலிதா ஷமீம் இப்படத்தை இயக்கி வருகிறார்.

இப்படத்தில் குழந்தை நட்சத்திரங்களாக நடித்தவர்கள் வளரும் வரை காத்திருந்து, 7 ஆண்டுகள் கழித்து காட்சிகளை படமாக்கியுள்ளனர். இது திரைப்பட வரலாற்றில் புதிய முயற்சியாகும்.
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பைசன் முதல் டீசல் வரை... இந்த வாரம் ஓடிடியில் வெளியாகும் ஏராளமான படங்கள்!

மகன் பிடித்த படங்கள்... மியா!

போர்நிறுத்தத்தை மீறும் இஸ்ரேல்! காஸாவில் மீண்டும் தாக்குதல்; 33 ஆக அதிகரித்த உயிர்ப் பலிகள்!

2014-ல் பிரதமர் பதவிக்கு மோடியை நிராகரித்தவரா நிதீஷ் குமார்?

குடியரசுத் தலைவர், ஆளுநருக்கு காலக்கெடு விதிக்க முடியாது! உச்ச நீதிமன்றம் | SC | RN Ravi

SCROLL FOR NEXT