செய்திகள்

கீர்த்தி சுரேஷின் குத்தாட்டம்: வெளியானது மாமன்னன் படத்திலிருந்து புதிய லிரிக்கல் விடியோ! 

மாமன்னன் படத்திலிருந்து கொடி பறக்குற காலம் எனும் லிரிக்கல் விடியோ வெளியாகியுள்ளது. 

DIN

பரியேறும் பெருமாள், கர்ணன் ஆகிய படங்களுக்குப் பின் உதயநிதி ஸ்டாலின் நடிப்பில் மாமன்னன் என்கிற படத்தை மாரி செல்வராஜ் இயக்கியுள்ளார். நீண்ட நாள்களாக தயாரிப்பிலிருக்கும் இப்படத்தின் படப்பிடிப்பு சமீபத்தில் நிறைவு பெற்றது. 

மேலும், இந்த படத்தில் கீர்த்தி சுரேஷ், வடிவேலு, ஃபஹத் பாசில் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். இந்த படத்திற்கு ஏ.ஆர்.ரகுமான் இசை அமைத்திருக்கிறார்.

ரெட் ஜெயண்ட் மூவிஸ் நிறுவனம் தயாரித்துள்ள இப்படத்தில் வடிவேலு பாடிய பாடல் வெளியாகி மாபெரும் வரவேற்பை பெற்றது. தொடர்ந்து, ஜூன் 1-ஆம் தேதி இசை வெளியீட்டு விழா நடைபெற்றது.

இந்நிலையில், பாடகிகள் கல்பனா, ரக்ஷிதா, தீப்தி, அபர்ணா உள்ளிட்டோர் பாடிய ‘கொடி பறக்குற காலம்’ பாடலின் லிரிக்கல் விடியோ வெளியாகியுள்ளது.  

இதில் கீர்த்தி சுரேஷ் கல்லூரி கலைநிகழ்ச்சியில் ஆடிப் பாடியுள்ளார். குத்தாட்டம் ஆடியுள்ள கீர்த்தி சுரெஷின் இந்தப் பாடல் தியேட்டரில் நிச்சயம் ரசிகர்களின் விசில்களை பறக்கவிடும் எனத் தெரிகிறது.  

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

அடுத்த 24 மணிநேரத்தில் இந்தியா மீது கணிசமான வரி: டிரம்ப்

ஏமாற்றமளித்தாலும் நியாயமான முடிவே கிடைத்துள்ளது: பென் ஸ்டோக்ஸ்

மணிப்பூரில் மேலும் 6 மாதங்களுக்கு குடியரசுத் தலைவர் ஆட்சி! நாடாளுமன்றத்தில் தீர்மானம்!

தில்லி அரசுக்கு எதிராக அணிதிரண்ட பெற்றோர்கள்: சட்டப்பேரவை முற்றுகை போராட்டம்!

கூலி படத்தில் சாட்ஜிபிடி உதவியால் பாடலை முடித்த அனிருத்!

SCROLL FOR NEXT