முகப்பு
செய்திகள்

தனுஷ் இயக்கத்தில் எஸ்.ஜே.சூர்யா

நடிகர் தனுஷின் 50-வது படத்தில் இணையவுள்ளதை எஸ்.ஜே.சூர்யா உறுதி செய்துள்ளார்.

செய்திகள்

தனுஷ் இயக்கத்தில் எஸ்.ஜே.சூர்யா

நடிகர் தனுஷின் 50-வது படத்தில் இணையவுள்ளதை எஸ்.ஜே.சூர்யா உறுதி செய்துள்ளார்.

Updated On : 1 பிப்ரவரி, 2024 at 7:07 PM
பகிர்:

நடிகர் தனுஷின் 50-வது படத்தில் இணையவுள்ளதை எஸ்.ஜே.சூர்யா உறுதி செய்துள்ளார்.

தனுஷ் நடிப்பில் வெளியான ‘வாத்தி’ திரைப்படம் கலவையான விமர்சனங்களைப் பெற்ற நிலையில், தற்போது இயக்குநர் அருண் மாதேஸ்வரன் இயக்கத்தில் ‘கேப்டன் மில்லர்’ படத்தில் தனுஷ் நடித்து வருகிறார். இந்தப் படம் தீபாவளியை முன்னிட்டு திரைக்கு வரவுள்ளது.

இதனைத் தொடர்ந்து, தன் 50-வது படத்தை சன் பிக்சர்ஸ் தயாரிப்பில் தனுஷ் இயக்கவுள்ளார். சில நாள்களுக்கு முன்பு இதற்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியானது.

இந்தப் படத்தில் தனுஷுக்கு ஜோடியாக துஷரா விஜயனும், சகோதரர்களாக எஸ்.ஜே.சூர்யா, சுதிப் கிஷன் நடிக்கவுள்ளதாக தகவல்கள் வெளியாகியிருந்தது.

இந்நிலையில், இத்தகவலை இயக்குநரும் நடிகருமான எஸ்.ஜே.சூர்யா நேர்காணல் ஒன்றில் உறுதிசெய்துள்ளார்.

மேலும், வடசென்னையை மையமாக கொண்டு உருவாகும் இப்படத்துக்கு ஏ.ஆர்.ரகுமான் இசையமைக்கவுள்ளதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன.

முன்னதாக, தனுஷ் பா.பாண்டி படத்தின் மூலம் இயக்குநராக அறிமுகமாகி நல்ல வரவேற்பைப் பெற்றிருந்தது குறிப்பிடத்தக்கது.

முழு கட்டுரையைப் படிக்க →