பாயும் ஒளி நீ எனக்கு: 2வது பாடல் வெளியானது!
நடிகர் விக்ரம் பிரபு வாணி போஜனுடன் நடித்துள்ள பாயும் ஒளி நீ எனக்கு திரைப்படத்தின் 2வது பாடல் வெளியாகியுள்ளது.
டாணாக்காரன், பொன்னியின் செல்வன் படங்களின் வெற்றிகளுக்குப் பிறகு விக்ரம் பிரபு , நடிகை வாணி போஜன் உடன் நடித்துள்ள படம் ‘பாயும் ஒளி நீ எனக்கு’. இந்தப் படத்தினை இயக்குகிறார் கார்திக் அத்வைத். இப்படத்தினை எழுதி இயக்குவது மட்டுமல்லாமல் தயாரிப்பாளராகவும் களமிறங்கியுள்ளார் கார்த்திக் அத்வைத்.
இந்தப் படத்தில் விவேக் பிரசன்னா முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். இந்தப்படத்திற்கு இசை- சாகர், பாடலாசிரியர்-கு. கார்த்திக் நேத்தா, ஸ்டன்ட் மாஸ்டர்- தினேஷ் காசி.
இந்தப் படம் ஜூன் 23ஆம் தேதி திரையரங்குகளில் உலகமெங்கும் வெளியாகுமென படக்குழு ஏற்கனவே தெரிவித்திருந்தது. படத்தின் டிரைலர் மற்றும் இசை ஜூன் 16ஆம் தேதி வெளியாகுமென படக்குழு சமீபத்தில் தெரிவித்தது.
இந்நிலையில் படத்தின் 2 ஆம் பாடலான ‘ஹே பாப்பா’ வெளியாகியுள்ளது. கு. கார்த்திக் எழுதிய இந்தப் பாடலை கபில் கபிலன் பாடியுள்ளார்.