சலார் படக்குழுவைச் சேர்ந்த அனைவருக்கும் தலா ரூ.10,000 அன்பளிப்பாக வழங்கவுள்ளார் நடிகர் பிரபாஸ்.
இயக்குநர் பிரசாந்த் நீல் இயக்கத்தில் நடிகர் யஷ் நடிப்பில் உருவான கேஜிஎஃப் திரைப்படம் வசூலில் புதிய சாதனையை அடைந்ததுடன் வெளியான நாளிலிருந்து தற்போது வரை அந்த படத்தின் பிரமாண்டம் குறித்து பலரும் பாராட்டி பேசி வருகின்றனர். இந்திய அளவில் மிகப்பெரிய வெற்றியைப் பெற்றதுடன் ரூ.1,200 கோடி வசூலையும் அடைந்தது.
அதனைத் தொடர்ந்து, இயக்குநர் பிரஷாந்த் நீல் தற்போது நடிகர் பிரபாஸை நாயகனாக வைத்து ‘சலார்’ படத்தை இயக்கி வருகிறார். இந்தப் படத்தில் ஸ்ருதி ஹாசன் நாயகியாகவும் பிரித்விராஜ் முக்கிய கதாபாத்திரத்திலும் நடித்து வருகின்றனர்.
இதையும் படிக்க: தனுஷ் படத்தில் நடிக்கவில்லை: பிரபல நடிகர்
சலார் 2023 - செப்டம்பர் 28 ஆம் தேதி திரைக்கு வரும் என அப்படத்தின் தயாரிப்பு நிறுவனமான ஹொம்பலே ஃபிலிம்ஸ் அறிவித்திருந்தது.
இந்நிலையில், இப்படத்திற்காக இரவு, பகல் பாராமல் கடுமையாக உழைக்கும் படக்குழுவினர் அனைவருக்கும் ரூ.10,000 அன்பளிப்பாக வழங்க நடிகர் பிரபாஸ் முன்வந்துள்ளார். தொடர்புடையவர்களின் வங்கிக்கணக்கிற்கு இப்பணத்தை அனுப்பி வைப்பதற்கான பணியும் துவங்கியுள்ளதாக தகவல்!
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.