முகப்பு
செய்திகள்

ஆதிபுருஷ்: 2 நாளில் ரூ.240 கோடி வசூல்- ரசிகர்கள் அதிர்ச்சி! 

நடிகர் பிரபாஸ் நடிப்பில் வெளியான ஆதிபுருஷ் திரைப்படம் உலகம் முழுவதும் ரு.240 கோடி வசூலித்துள்ளாதாக படக்குழு தெரிவித்துள்ளது. 

Updated On : 18 ஜூன், 2023 at 4:06 PM
பகிர்:
Updated On : 2 பிப்ரவரி, 2024 at 5:17 PM

பாகுபலி 2 படத்துக்குப் பிறகு சாஹோ, ராதே ஷ்யாம்  ஆகிய படங்களில் நடித்தார் பிரபாஸ். பாகுபலி 2 படத்துக்கு அடுத்து பிரபாஸ் நடிக்கும் அனைத்து படங்களும் ஹிந்தியிலும் வெளியாகும் விதத்தில் உருவாக்கப்பட்டு வருகின்றன.

தன்ஹாஜி படத்தை இயக்கிய ஓம் ராவுத் இயக்கத்தில் ஆதிபுருஷ் என்கிற 3டி படத்தில் பிரபல பாலிவுட் நடிகர் சயிப் அலி கானுடன் இணைந்து நடித்துள்ளார் பிரபாஸ். சீதாவாக க்ரித்தி சனோன் நடித்துள்ளார். 

ஹிந்தி, தெலுங்கில் உருவாகும் இப்படம் தமிழ், மலையாளம், கன்னடம் மொழிகளிலும் ஜூன் 16 ஆம் தேதி வெளியானது. படத்தின் கிராபிக்ஸ் காட்சிகள் மோசமாக ரசிகர்களால் விம்ர்சிக்கப்பட்டது. படமும் கலவையான விமர்சனங்களையே பெற்று வருகிறது.

இந்நிலையில் உலகம் முழுவது 2 நாளில் ரூ.240 கோடி வசூலித்துள்ளதாக படக்குழு தெரிவித்துள்ளது. நன்றாக இல்லாத படத்திற்கு இவ்வளவு வசூலா என ரசிகர்கள் சமூக வலைதளங்களில் கேள்வி எழுப்பியுள்ளனர். அதேசமயம் பிரபாஸ் ரசிகர்கள் படம் பிளாக்பஸ்டர் எனவும் கமெண்டில் தெரிவித்து வருகின்றனர். 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.