செய்திகள்

கருமேகங்கள் கலைகின்றன படத்தின் முன்னோட்ட காட்சி வெளியீடு! 

DIN

அருவி படத்தில் நடித்து கவனம் பெற்ற நாயகி அதிதி பாலன். தங்கர்பச்சான் இயக்கத்தில் ‘கருமேகங்கள் கலைகின்றன’ படத்தில் இணைய உள்ளார். இதில் பாரதிராஜா, கௌதம் மேனன், யோகி பாபு முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். 

மம்தா மோகன்தாஸ் நடிக்க வேண்டிய படத்தில் அதிதிபாலன் நடிக்கிறார். பாரதிராஜாவுக்கு உடல்நிலை சரியில்லாத காரணமாக அவர் நடிக்க வேண்டிய தேதி வீணாகி விட்டது. பின்னர் அவர் கால்சீட் கிடைக்காததால் அவருக்கு பதில் அதிதி பாலன் நடித்தார். 

மனித உறவுகளை மையமாகக் கொண்ட கதைகளே தங்கர்பச்சானின் திரைமொழி வழக்கம். இந்த வரிசையில் தற்போது அவர் இயக்கியுள்ள படத்துக்கு "கருமேகங்கள் கலைகின்றன' என்று பெயரிட்டுள்ளார். இந்தப் படத்தை வாவ் மீடியா என்டர்டெயின்மென்ட் நிறுவனத்தின் சார்பில் ஈ.வீரசக்தி தயாரிக்கிறார். இயக்குநர் பாரதிராஜா, யோகிபாபு, கெளதம் வாசுதேவ் மேனன் உள்ளிட்டோர் நடிக்கின்றனர். இப்படத்துக்காக இசையமைப்பாளர் ஜி.வி.பிரகாஷ் முதன் முறையாக தங்கர் பச்சானுடன் இணைதுள்ளார். ஏகாம்பரம் ஒளிப்பதிவு செய்துள்ளார். 

தற்போது, தந்தையர் தினத்தினை முன்னிட்டு படத்தின் முன்னோட்ட காட்சிகள் வெளியாகியாகிள்ளது. 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

லல்லாஹி லைரே... அபர்ணா!

கார்கிலில் வீட்டிலிருந்தபடியே வாக்களிக்க ஏற்பாடு: முதல் நாளில் 47 பேர் வாக்குப்பதிவு

30 கோடி பார்வைகளை கடந்த வைரல் விடியோ...யார் இந்த ராகுல் காந்தி!

70வது பிறந்த நாளை கேக் வெட்டி கொண்டாடிய இபிஎஸ்... விஜய், அண்ணாமலை வாழ்த்து!

தமிழ்நாட்டில் எங்கெல்லாம் மழை பெய்துள்ளது?

SCROLL FOR NEXT