செய்திகள்

10 படங்களுடன் சினிமாவில் இருந்து விலகி விடுவேன் : லோகேஷ் கனகராஜ் அதிரடி! 

DIN

மாநகரம், கைதி, மாஸ்டர், விக்ரம் ஆகிய படங்கள் மூலம் கவனம் ஈர்த்து தமிழில் அதிக சம்பளம் வாங்கும் இயக்குநராகவும் இளைய தலைமுறை இயக்குநர்களில் முக்கிய இயக்குநராகவும் கவனிப்படுகிறார் இயக்குநர் லோகேஷ் கனகராஜ். 

முதலில் வங்கியில் வேலை செய்து வந்த லோகேஷ் பின்னர் குறும்படங்கள் இயக்கினார். தற்போது திரைப்படங்களை இயக்கி வருகிறார். விஜய்யுடன் லியோ படத்தினை இயக்கி வருகிறார். இதில் த்ரிஷா, சஞ்சய் தத், கௌதம் மேனன், ப்ரியா ஆனந்த், மன்சூர் அலிகான் என பெரிய நடிகர் பட்டாளமே நடித்து வருகிறது.  

இப்படம் வெளியீட்டிற்கு முன்பே ஓடிடி, இசை உரிமம், விநியோக உரிமம் என ரூ.350 கோடி ரூபாய்க்கு மேல் வருவாய் ஈட்டியுள்ளதாகவும் கூறப்படுகிறது. தற்போது இறுதிக் கட்ட படப்பிடிப்பில் உள்ளது. இந்நிலையில் யூடியூப் சேனல் ஒன்றிற்கு லோகேஷ் கனகராஜ் பேட்டியளித்துள்ளார். அதில் கூறியதாவது: 

நான் நிறைய படங்கள் எடுக்க விரும்பவில்லை. 20 வருடங்கள் இருக்க விரும்பவில்லை.  நான் 10 படங்களுக்கு மேல் இயக்க மாட்டேன். அதுதான் நான் நினைத்துக் கொண்டு இருக்கிறேன். தற்போது 5வது படமாக லியோ எடுத்து வருகிறேன். எனக்கு இந்தப் படத்தின் எண்ணிக்கையைவிட விஜய் அண்ணாவுடன் இருப்பது மிகவும் பிடித்துள்ளது. மக்களுக்கு பிடிப்பதால் படங்கள் இயக்குகிறேன். எல்சியூவும் மக்களுக்கு பிடிப்பதால் செய்வேன். 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

கை கோக்கும் மாநகர கயவர்

தேவையற்ற விவாதம்!-"கோவிஷீல்டு' தடுப்பூசி பற்றிய தலையங்கம்

படிக்கட்டில் இருந்து தவறி விழுந்து வட மாநில தொழிலாளி பலி

கும்பக்கரை அருவியில் குளிக்க அனுமதி

கல்வி உதவித் தொகை பெற விண்ணப்பிக்கலாம்

SCROLL FOR NEXT