செய்திகள்

தமிழில் நீண்ட இடைவேளைக்குப் பிறகு மீண்டும் புதிய 'திரில்லர் சீரியல்'

தமிழ் சின்னத் திரையில் நீண்ட காலத்திற்குப் பிறகு மீண்டு திரில்லர் தொடர் ஒளிபரப்பாகவுள்ளது. அனாமிகா என பெயரிடப்பட்டுள்ள இந்த தொடர் சன் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகவுள்ளது. 

DIN


தமிழ் சின்னத் திரையில் நீண்ட காலத்திற்குப் பிறகு மீண்டு திரில்லர் தொடர் ஒளிபரப்பாகவுள்ளது. அனாமிகா என பெயரிடப்பட்டுள்ள இந்த தொடர் சன் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகவுள்ளது. 

தமிழ்த் தொலைக்காட்சி தொடர்களில் திரில்லர் தொடர்கள் அவ்வபோது ஒளிபரப்பாகி மக்களைக் கவரும். தற்போது நீண்ட இடைவெளிக்குப் பிறகு திரில்லர் தொடர் ஒளிபரப்பாகவுள்ளது. 

அனாமிகா எனப் பெயரிடப்பட்டுள்ள இந்தத் தொடரில், கன்னட சின்னத் திரை தொடரில் பிரபலமான அக்‌ஷதா தேஷ்பாண்டே முதன்மை பாத்திரத்தில் நடிக்கிறார். அவர் தவிர மற்ற இருவர் முதன்மை பாத்திரங்களில் நடிக்கின்றனர். 

இது தொடர்பான முன்னோட்ட விடியோவை சன் தொலைக்காட்சி தற்போது வெளியிட்டுள்ளது. இந்த தொடருக்கு ரசிகர்கள் மத்தியில் வரவேற்பும் அதிகரித்துள்ளது. 

அனாமிகா தொடரின் மற்ற நடிகர்கள் குறித்த தகவல்கள் அடுத்தடுத்து வெளியாகவுள்ளன. இந்தத் தொடர் முக்கோணக் காதலின் அடிப்படையில் திரில்லர் பாணியில் உருவாகும் தொடராக இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. 
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

ரிஷப் ஷெட்டிக்கு தேசிய விருது கிடைக்க வேண்டும்: அட்லி

ராம் அப்துல்லா ஆண்டனி டிரெய்லர்!

தங்கம் விலை ரூ. 92,000! மாலையில் மேலும் ரூ. 600 உயர்ந்தது! வெள்ளி விலையும்...

கரூர் பலி பற்றிய கேள்வி! தவிர்த்த மாதவன்

அதிமுக தொண்டர்கள் எங்கள் கட்சிக் கொடியவே தூக்க மாட்டாங்க... - செல்லூர் ராஜு

SCROLL FOR NEXT