முகப்பு
செய்திகள்

லியோ படத்தின் முதல் பார்வை குறித்து அப்டேட்!

லியோ படத்தின் முதல் பார்வை குறித்து முக்கிய அப்டேட் வெளியாகியுள்ளது.

Updated On : 21 ஜூன், 2023 at 11:32 PM
பகிர்:

லியோ படத்தின் முதல் பார்வை குறித்து முக்கிய அப்டேட் வெளியாகியுள்ளது.

விக்ரம் படத்தின் வெற்றிக்குப் பிறகு இயக்குநர் லோகேஷ் கனகராஜ் நடிகர் விஜய்யுடன் லியோ படத்தில் இணைந்துள்ளார். இதில் த்ரிஷா,  சஞ்சய் தத் உள்ளிட்ட பல பிரபலங்கள் இணைந்துள்ளனர்.

மிஷ்கின், சஞ்சய் தத், கௌதம் மேனன்  ஆகியோர் காஷ்மீர் படப்பிடிப்பை முடித்துவிட்டதாக லோகேஷ் சமீபத்தில் கூறியிருந்தார். இப்படம் வெளியீட்டிற்கு முன்பே ஓடிடி, இசை உரிமம், விநியோக உரிமம் என ரூ.350 கோடி ரூபாய்க்கு மேல் வருவாய் ஈட்டியுள்ளதாகவும் கூறப்படுகிறது.

Advertisement

லியோ படம் இந்தாண்டு அக்டோபர் மாதம் திரைக்கு வருகிறது.  இப்படத்திற்கு அனிருத் இசையமைக்கிறார். இப்படத்தின் முதல் பாடலான ‘நான் ரெடி’ பாடல் விஜயின் பிறந்த நாளான நாளை(ஜூன் 22) வெளியாகும் என அறிவிக்கப்பட்டது.

இந்நிலையில், லியோ படத்தின் முதல் பார்வை நள்ளிரவு 12 மணிக்கு வெளியாகும் என படக்குழு அதிகார்வபூர்வமாக தெரிவித்துள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.