செய்திகள்

துல்கர் சல்மானின் புதிய பட டீசரை வெளியிடும் பிரபலங்கள்!

நடிகர் துல்கர் சல்மானின் கிங் ஆஃப் கோதா பட டீசரை பிரபலங்கள் வெளியிட உள்ளார்கள். 

DIN

துல்கர் சல்மானின் நடிப்பில் கடந்தாண்டு வெளியாகி நல்ல வரவேற்பைப் பெற்றது சீதா ராமம் திரைப்படம். இந்தப் படத்தில் துல்கர் சல்மானுக்கு ஜோடியாக மிருணாள் தாக்கூர் நடிக்க, ராஷ்மிகா ஒரு முக்கியமான வேடத்தில் நடித்திருந்தார். 5 மொழிகளில் வெளியாகி பெறும் ஆதரவினைப் பெற்றது. 

தற்போது சீதா ராமம் வெற்றியை தொடர்ந்து கிங் ஆஃப் கோதா என்ற புதிய படத்தின் படப்பிடிப்பினை முடித்துள்ளார்கள். இந்தப் படத்தினை அபிலாஷ் ஜோஷி இயக்குகிறார். ஜீ ஸ்டூடியோஸ் இந்த படத்தினை தயாரிக்கிறது. இதில் சார்பட்டா பரம்பரை புகழ் டேன்ஸிங் ரோஸ் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். மேலும், ஐஸ்வர்யா லக்‌ஷ்மி, பிரசன்னா, செம்பன் வினோத், அனிகா சுரேந்திரன் என பலர் நடித்துள்ளனர். 

சமீபத்தில் படத்தின் கதாபாத்திரங்களை அறிமுகப்படுத்தியது. இந்த விடியோ இணையத்தில் வைரலானது. இந்தப் படத்தின் டீசர் 28ஆம் தேதி வெளியாக உள்ளது. தமிழில் நடிகர் சிம்பு வெளியிட தெலுங்கில் நடிகர் மகேஷ் பாபு வெளியிடுகிறார். இரண்டுமே மாலை 6 மணிக்கு வெளியாக உள்ளது. 

இந்தப் படமும் மலையாளம், தமிழ், தெலுங்கு, ஹிந்தி, கன்னடா என 5 மொழிகளில் வெளியாக இருப்பது குறிப்பிடத்தக்கது. 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

மகளிா் தொழில்நுட்பக் கல்லூரியில் திறன் மேம்பாட்டுப் பயிற்சி

செண்டூரில் ஆடிப்பெருக்கு விழா: மயிலம் முருகனுக்கு தீா்த்தவாரி

கூட்டுறவும் நாட்டுயா்வும்!

மின்னணு பொருள்கள் விற்பனையகத்தில் தீ விபத்து

கோயில்களில் சிறப்பு வழிபாடு

SCROLL FOR NEXT