பிரபல ஹிந்தி நடிகர் சயிப் அலிகானின் மகள் சாரா அலிகான். கேதர்நாத் படத்தின் மூலம் ஹிந்தி சினிமாவில் 2018இல் அறிமுகமான சாரா அலிகான் நடிகர் தனுஷ் உடன் 'அட்ரங்கி ரே' படத்தில் நடித்துள்ளார். இது தமிழில் 'கலாட்டா கல்யாணம்' என்ற பெயரில் வெளியானது. இந்தப் படத்தில் வந்த சக்களத்தி பாடல் தமிழ் ரசிகர்களிடையே மிகவும் புகழ்பெற்றது.
இதையும் படிக்க: ஏழாம் அறிவு படத்தில் இட ஒதுக்கீட்டுக்கு எதிரான வசனத்தை வைத்திருக்கக்கூடாது: உதயநிதி ஸ்டாலின் வருத்தம்!
நடிகர் விக்கி கௌசல் உடன் சாரா இணைந்து நடித்துள்ள படம்தான் 'ஜாரா ஹட்க் ஜாரா பச்கி'. ஜூன் 2இல் வெளியான இந்தப் படத்தினை இயக்கியுள்ளார் லக்ஷ்மன் உடேகர். இவர் மிமி என்ற படத்தின் மூலம் பிரபலமான இயக்குநராக அறியப்பட்டவர்.
இதையும் படிக்க: போர் தொழில் படத்தின் ஓடிடி வெளியீடு குறித்த தகவல்!
இந்தப் படம் வெளியாகி நல்ல வரவேற்பினை பெற்றதோடு இதுவரை ரூ.80 கோடி வசூலித்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
ரூ.40 கோடி பட்ஜெட்டில் உருவான இந்தப்படம் இரு மடங்கு லாபம் ஈட்டியுள்ளதால் படக்குழு மகிழ்ச்சியில் உள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.