செய்திகள்

டிஆர்பி இழக்கும் பாண்டவர் இல்லம் தொடர்... ஒளிபரப்பு நேரத்தில் மாற்றம்!

 இயக்குநர் செல்வம் சுப்பையா பாண்டவர் இல்லம் தொடரை இயக்குகிறார். 

DIN

சன் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகிவரும் பாண்டவர் இல்லம் தொடரின் ஒளிபரப்பு நேரம் மாற்றியமைக்கப்பட்டுள்ளது. 

சன் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகிவரும் தொடர்கள் பெருமளவு இல்லத்தரசிகளை ரசிகர்களாகக் கொண்டுள்ளன. குறிப்பாக பகல் நேரங்களில் ஒளிபரப்பாகும் தொடர்கள் முழுக்க முழுக்க இல்லத்தரசிகளை பார்வையாளர்களாகக் கொண்டே எடுக்கப்பட்டு வருகிறது. 

அந்தவகையில் சன் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகிவந்த பாண்டவர் இல்லம் தொடர் பல ரசிகர்களைக் கொண்டுள்ளது. சகோதர்கள் 5 பேர் கொண்ட வீட்டில் அவர்களுக்கு மனைவியாக வருபவர்களிடையே நடக்கும் கதைதான் பாண்டவர் இல்லம். அவர்களைப் பழிவாங்க ஜமீன் குடும்பத்தினர் முயற்சிக்கின்றனர். 

இந்தத் தொடரில் பாப்ரி கோஷ், நரேஷ் ஈஸ்வர், குகன் சண்முகம், ஆர்த்தி சுபாஷ் உள்ளிட்ட பலர் நடித்து வருகின்றனர். இந்தத் தொடர் சன் தொலைக்காட்சியில் திங்கள் முதல் சனிக்கிழமை வரை பிற்பகல் 1.30 மணிக்கு ஒளிபரப்பாகி வந்தது. 

தற்போது இந்தத் தொடரின் ஒளிபரப்பு நேரம் மாற்றிமைக்கப்பட்டு முற்பகல் 11.30 மணிக்கு ஒளிபரப்பாகிறது. 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

யார் இந்த மத் டெய்ட்கே? 24 வயது செய்யறிவு ஆய்வாளர்! ரூ.2,000 கோடி சம்பளம்!!

அவதூறு வழக்கு: சிறப்பு நீதிமன்றத்தில் ராகுல் ஆஜர்!

10 கோடி பார்வைகளைப் பெற்ற கனிமா!

லாக்-அப் மரணம் அல்ல! கோவை காவல் நிலையத்தில் ஒருவர் மர்ம மரணம்! நடந்தது என்ன?

தொடர்ந்து 2-ம் நாளாக சரிவில் பங்குச் சந்தை!

SCROLL FOR NEXT