செய்திகள்

இந்த வாரம் திரையரங்குகளில் வெளியாகும் படங்களின் பட்டியல்!

இந்த வாரம் திரையரங்குகளில் வெளியாகும் படங்களின் பட்டியல் வெளியாகியுள்ளது. அவற்றைக் காண்போம்.

DIN

இந்த வாரம் திரையரங்குகளில் வெளியாகும் படங்களின் பட்டியல் வெளியாகியுள்ளது. அவற்றைக் காண்போம்.

அயோத்தி 

சசிகுமார் நடிப்பில் உருவாகியிருக்கும் ‘அயோத்தி’ திரைப்படத்தில் 'குக் வித் கோமாளி' புகழ், போஸ் வெங்கட் மற்றும் யஷ்பால் சர்மா உள்ளிட்டோர் நடித்துள்ளனர். இப்படம்  வருகிற மார்ச் 3 ஆம் தேதி வெளியாகிறது.

பஹீரா

திரிஷா இல்லனா நயன்தாரா, அன்பானவன் அசராதவன் அடங்காதவன் போன்ற படங்களை இயக்கிய ஆதிக் ரவிச்சந்திரன் அடுத்ததாக பிரபு தேவாவை வைத்து இயக்கியுள்ள படம் ‘பஹீரா’. இந்தப் படத்தில் அமைரா தஸ்தூர், ரம்யா நம்பீசன், ஜனனி, சஞ்சிதா ஷெட்டி, காயத்ரி, சாக்ஷி அகர்வால், சோனியா அகர்வால் உள்ளிட்டோர் முக்கிய வேடங்களில் நடித்துள்ளனர். கணேசன் சேகர் இசையமைத்துள்ளார். ‘பஹீரா’ திரைப்படம் வருகிற மார்ச் 3 ஆம் தேதி வெளியாகிறது.

பல்லு படாம பாத்துக்க

அட்டக்கத்தி தினேஷ் கதாநாயகனாக நடித்துள்ள திரைப்படம் பல்லு படாம பாத்துக்க. இப்படத்தை யூடியூப் பிரபலம் விஜய் வரதராஜ் இயக்கியுள்ளார். இப்படமும் மார்ச் 3 ஆம் தேதி வெளியாகிறது.

இன் கார்

இன் கார்  திரைப்படம் பான் இந்தியா படமாக மார்ச் 3 ஆம் தேதி வெளியாகிறது. இந்த திரைப்படத்தை ஹர்ஷ் இயக்கியுள்ளார். இறுதி சுற்றுச் திரைப்படத்தின் நாயகி ரித்திகா சிங் மற்றும் சந்தீப் கோயத் ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர்.

அரியவன்

இயக்குநர் மித்ரன் ஆர்.ஜவஹரின் ‘அரியவன்’ படம் மார்ச் 3 ஆம் தேதி வெளியாகிறது.  அறிமுக நாயகன் ஈஷான் நடிக்கும் இந்தப் படத்தின் கதையை மாரிசெல்வன் எழுதியுள்ளார். இது உண்மை சம்பவத்தை அடிப்படையாக கொண்டு உருவாக்கப்பட்டுள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

சோளிங்கரில் கேட்பாரற்று கிடந்த குழந்தை மீட்பு

மழை வருமோ... ராதிகா கௌஷிக்!

தீவிரமடையும் நெல் அறுவடைப் பணிகள்

உங்களை உணரும் கலை... தீப்தி சுனைனா!

ஹூண்டாய் புதிய வென்யூ கார் அறிமுகம் - புகைப்படங்கள்

SCROLL FOR NEXT