செய்திகள்

’பொன்னியின் செல்வன் 2’: கிளிம்ப்ஸ் விடியோ வெளியீடு

பொன்னியின் செல்வன் 2 பாகத்தின் புரோமோஷனுக்காக கிளிம்ஸ் விடியோ ஒன்றை படக்குழு வெளியிட்டுள்ளது.

DIN

பொன்னியின் செல்வன் 2 பாகத்தின் புரோமோஷனுக்காக கிளிம்ஸ் விடியோ ஒன்றை படக்குழு வெளியிட்டுள்ளது.

இயக்குநர் மணிரத்னம் இயக்கத்தில் கடந்தாண்டு செப்டம்பர் 30 ஆம் தேதி உலகெங்கிலும் வெளியான  ’பொன்னியின் செல்வன்’ திரைப்படம் ரூ.500 கோடிக்கு மேல் வசூலித்துள்ளதாகவும் வெளிநாடுகளில் மட்டும் இந்தப் படம் ரூ.130 கோடி அளவுக்கு வசூலித்துள்ளதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

தமிழகத்தில் மட்டும் பொன்னியின் செல்வன் திரைப்படம் ரூ.230 கோடிக்கும் அதிகமாக வசூலித்து  வசூல் சாதனையில் முதல் இடத்துக்கு முன்னேறியது.

பொன்னியின் செல்வன் திரைப்படத்தின் இரண்டாம் பாகத்திற்கான மீதமுள்ள பணிகளை விரைவில் முடிக்க படக்குழு தீவிரம் காட்டி வருவதாகவும்,  இப்படத்தை வருகிற ஏப்ரல் 28 ஆம் தேதி வெளியிட இருப்பதாக படக்குழு அதிகாரப்பூர்வமாக தெரிவித்திருந்தது.

இந்த நிலையில், இப்படத்தின் புரோமோஷனுக்காக நடிகர்கள் விக்ரம், கார்த்தி, ஜெயம் ரவி படப்பிடிப்பு குறித்து பேசும் விடியோவை தயாரிப்பு நிறுவனம் வெளியிட்டுள்ளது.

முதல் பாகத்திலேயே முழுக்க லாபத்தைப் பெற்ற இத்திரைப்படம் 2 ஆம் பாகத்தில் வசூல் வேட்டையை நிகழ்த்த உள்ளது குறிப்பிடத்தக்கது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கரூர் கூட்ட நெரிசல் வழக்கு: தேதி குறிப்பிடாமல் ஒத்திவைத்தது உச்சநீதிமன்றம்

அழகு பூந்தோட்டம்... கல்யாணி பிரியதர்ஷன்!

உலகக் கோப்பை: இருவர் அரைசதம்; வங்கதேசத்துக்கு 228 ரன்கள் இலக்கு!

அழகோவியம்... நிவிஷா!

டாலருக்கு நிகரான ரூபாய் மதிப்பு 10 காசுகள் உயர்ந்து ரூ.88.69 ஆக நிறைவு!

SCROLL FOR NEXT