செய்திகள்

வசூலைக் குவிக்கும் ‘ரோமாஞ்சம்’

மலையாளத்தில்  வெளியான ‘ரோமாஞ்சம்’ திரைப்படம் வசூலைக் குவித்து வருகிறது.

DIN

மலையாளத்தில்  வெளியான ‘ரோமாஞ்சம்’ திரைப்படம் வசூலைக் குவித்து வருகிறது.

சமீப காலமாக மலையாள திரைப்படங்கள் தமிழகத்திலும்  வரவேற்பைப் பெற்று வருகின்றன. குறிப்பாக, ‘ந்நா தான் கேஸ் கொடு’, ’ஜன கன மன’, ‘நண்பகல் நேரத்து மயக்கம்’ ஆகியவை ரசிகர்கள் மத்தியில் பெரிதாக கொண்டாடப்பட்டது.

இந்நிலையில், சௌபின் ஷாகிர், செம்பன் வினோத், அர்ஜூன் அசோகன் உள்ளிட்டோர் நடிப்பில் வெளியான ‘ரோமாஞ்சம்’ திரைப்படம் கடந்த பிப்.3 ஆம் தேதி திரைக்கு வந்தது.

ஜித்து மாதவன் இயக்கத்தில் ரூ.3 கோடி செலவில் உருவாக்கப்பட்ட இப்படம் இதுவரை ரூ.55 கோடி வரை வசூலித்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. 

விக்ரம் படத்தின் ஒளிப்பதிவாளர் கிரிஷ் கங்காதரன் இப்படத்தின் தயாரிப்பாளர் என்பது குறிப்பிடத்தக்கது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

வந்துட்டேன்னு சொல்லு... ஸ்ருதி ஹாசன்!

முஸ்லிம் தலைமையாசிரியரை நீக்க பள்ளி குடிநீர்த் தொட்டியில் விஷம் கலப்பு! வலதுசாரி நபர்கள் கைது

தமிழகத்தில் ஆட்சிமாற்றம் வேண்டும் என நினைப்பவா்கள் ஓரணியில் திரள வேண்டும்: ஜி.கே. வாசன்

மின்னலொளி பெண்ணழகே... கிகி விஜய்!

ரூ.335 கோடி கடனை குறைத்து கொண்ட பிசி ஜுவல்லர்ஸ்!

SCROLL FOR NEXT