கோப்புப்படம் 
செய்திகள்

சிவாங்கிக்கு உடல்நிலை பாதிப்பு: அடுத்த வார குக் வித் கோமாளி நிகழ்ச்சியில் பங்கேற்பாரா?

சிவாங்கி தனக்கு ஏற்பட்டுள்ள உடல்நிலை பாதிப்பு குறித்து ட்விட்டரில் பதிவிட்டுள்ளார்.

DIN

சிவாங்கி தனக்கு ஏற்பட்டுள்ள உடல்நிலை பாதிப்பு குறித்து ட்விட்டரில் பதிவிட்டுள்ளார்.

சூப்பர் சிங்கர் மற்றும் குக் வித் கோமாளி நிகழ்ச்சி மூலம் பிரபலமடைந்தவர் சிவாங்கி. இவர் தற்போது குக் வித் கோமாளி நிகழ்ச்சியில் பங்கெடுத்து வருகிறார்.

சிவாங்கி சின்னத்திரை மட்டுமில்லாமல், வெள்ளித்திரையில் சிவகார்த்திகேயனின் டான் மற்றும் வடிவேலு நடிப்பில் வெளியான நாய் சேகர் ரிட்டர்ன்ஸ் படத்திலும் நடித்துள்ளார்.

இவர் பங்கேற்று வரும் குக் வித் கோமாளி நிகழ்ச்சிக்கு மட்டுமே ஏராளமான ரசிகர்கள் உள்ளனர். சிவாங்கி அவருக்கு ஏற்பட்டுள்ள உடல்நிலை பாதிப்பு தொடர்பாக ட்விட்டரில்  பதிவிட்டுள்ளார்.

அந்தப் பதிவில், "எல்லோருக்கும் வணக்கம்! எப்படி இருக்கிறீர்கள்? நீங்கள் நன்றாக இருக்கிறீர்கள் என்று நம்புகிறேன்! கடந்த இரண்டு நாள்களாக காய்ச்சலாலும் சளியாலும் எழுந்திருக்கக் கூட முடியவில்லை. ஆனால்  நீங்கள் எனக்கு கொடுக்கும் அன்பு உண்மையிலேயே அபரிவிதமானது. நீங்கள் என்னை மீண்டும் எழு  வைத்துள்ளீர்கள். உங்கள்  அன்பு இல்லாமல் நான் ஒன்றுமில்லை!நன்றி" எனப் பதிவிட்டுள்ளார்.

இந்தப் பதிவைக் கண்டு சிவாங்கியின் ரசிகர்கள் அடுத்த வார குக் வித் கோமாளி நிகழ்ச்சியில் பங்கேற்பாரா என்று ரசிகர்கள் கேள்வி எழுப்பி வருகின்றனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கம்பனின் தமிழமுதம் - 65: காற்றுக் கொந்தளிப்பில் விமானங்கள்!

தன்னை வியத்தலினால் கேடு

போரை நிறுத்திய புலவர்கள்!

நீர்க்குமிழிபோல வாழ்க்கை

இந்த வாரம் கலாரசிகன் - 28-09-2025

SCROLL FOR NEXT