செய்திகள்

ராஜா ராணி -2 தொடரிலிருந்து விலகிய நாயகிக்கு புதிய வாய்ப்பு!

ராஜா ராணி -2 தொடரிலிருந்து விலகிய நடிகை ரியா, ஜீ தமிழ் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகவுள்ள புதிய தொடரில் முதன்மை பாத்திரத்தில் நடிக்கவுள்ளார். 

DIN


ராஜா ராணி -2 தொடரிலிருந்து விலகிய நடிகை ரியா, ஜீ தமிழ் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகவுள்ள புதிய தொடரில் முதன்மை பாத்திரத்தில் நடிக்கவுள்ளார். 

ராஜா ராணி -2 தொடரில் சந்தியா என்ற முதன்மை பாத்திரத்தில் நடிகை ரியா நடித்து வந்தார். எனினும் சில காரணங்களுக்காக அவர் அந்தத் தொடரிலிருந்து விலக்கப்படுவதாக ராஜா ராணி -2 குழுவினர் அறிவித்திருந்தனர். 

ரியாவுக்கு பதிலாக ஆஷா கெளடா முதன்மை பாத்திரத்தில் நடிக்கத்தொடங்கினார். ஜீ தமிழில் ஒளிபரப்பான கோகுலத்தில் சீதை தொடரில் நடித்தவர் ஆஷா கெளடா. தற்போது ராஜா ராணி -2 தொடரில் அவர் நடித்து வருகிறார். 

ராஜா ராணி முதல் பாகம் விஜய் தொலைக்காட்சியில் வெற்றிகரமாக நிறைவடைந்த தொடர். இந்த வெற்றியின் எதிரொலியாக ராஜா ராணி -2 தொடர் ஒளிபரப்பாகி வருகிறது. 

இந்தத் தொடலிருந்து விலக்கப்பட்ட ரியாவுக்கு புதிய வாய்ப்பு தேடி வந்துள்ளது. அவர் ஜீ தமிழில் வெளியாகவுள்ள புதிய தொடரில் முதன்மை பாத்திரத்தில் நடிக்கவுள்ளார். அந்தத் தொடருக்கு சண்டக்கோழி என பெயரிடப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. 

ஜீ தமிழில் நண்பகல் நேரத்தில் ஒளிபரப்பாகி வரும் இரட்டை ரோஜா தொடருக்கு பதிலாக இந்த புதிய தொடர் ஒளிபரப்பாகும் என எதிர்பார்க்கப்படுகிறது. 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கல்வியே சநாதனத்தை முறிக்க வல்ல ஒரே ஆயுதம்! - கமலுக்கு பாஜக உறுப்பினர்கள் கண்டனம்

உலக சினிமா

ஆபரேஷன் சிந்தூர்

தென்னாப்பிரிக்கக் காடுகளில்...

வெளிநாட்டு மண்ணில் முதல்முறை... இந்திய அணியின் தனித்துவமான சாதனை!

SCROLL FOR NEXT