சார்பட்டா பரம்பரை இரண்டாம் பாகத்தின் இசையமைப்பாளர் குறித்து தகவல் வெளியாகியுள்ளது.
பா.இரஞ்சித் இயக்கத்தில் ஆர்யா நடிப்பில் 2021 ஆம் ஆண்டு வெளியாகி மிகப்பெரிய வரவேற்பைப் பெற்ற திரைப்படம் ‘சார்பட்டா பரம்பரை’. குத்துச்சண்டையை மையமாக வைத்து உருவான இப்படம் விமர்சகர்கள் மத்தியிலும் பெரிதாக பேசப்பட்டது.
சில நாள்களுக்கு முன் இப்படத்தின் இரண்டாம் பாகம் தயாராக உள்ளதாக படத்தின் தயாரிப்பு நிறுவனமான நீலம் புரோடக்ஷன்ஸ் அதிகாரப்பூர்வ அறிவிப்பை வெளியிட்டிருந்தது.
இந்தப் பாகத்திலும் ஆர்யா நாயகனாக நடிக்க உள்ளார். மேலும், இப்படத்தின் இசையமைப்பாளர் யார்? என்கிற கேள்வி ரசிகர்கள் மத்தியில் எழுந்துள்ளது.
இதையும் படிக்க: ’அயோத்தி’ கதை திருடப்பட்டதா? பரபரப்பு!
காரணம் முதல் பாகத்தின் பாடல்கள் மற்றும் பின்னணி இசை பெரிதாக பேசப்பட்டது. ஆனால், பாடகர் அறிவு மற்றும் சந்தோஷ் நாராயணன் மகள் தீ இருவரும் இணைந்து பாடிய ‘எஞ்சாய் எஞ்சாமி’ பாடலுக்காக அறிவு புறக்கணிக்கப்பட்டத்தைத் தொடர்ந்து பா.இரஞ்சித் தன் படங்களில் சந்தோஷ் இசையமைப்பதை தவிர்த்து வந்தார்.
இந்நிலையில், சார்பட்டா 2 அறிவிப்பு வந்தவுடன் சந்தோஷ் தன் டிவிட்டர் பக்கத்தில் ‘வானம் விடிஞ்சுருச்சு காசுடா மேளத்தை’ என மகிழ்ச்சியுடன் போஸ்டரை பகிர்ந்தார். இதனால், மீண்டும் பா.இரஞ்சித் இப்படத்தில் சந்தோஷுடன் இணைவார் என எதிர்பார்க்கப்படுகிறது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.