செய்திகள்

அயோத்தி படத்தில் ஒவ்வொரு காட்சியும் செதுக்கப்பட்டுள்ளது: சீமான்

அயோத்தி படத்தில் ஒவ்வொரு காட்சியும் செதுக்கப்பட்டுள்ளது என்று நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான் தெரிவித்துள்ளார்.

DIN

அயோத்தி படத்தில் ஒவ்வொரு காட்சியும் செதுக்கப்பட்டுள்ளது என்று நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான் தெரிவித்துள்ளார்.
ட்ரைடென்ட் ஆர்ட்ஸ் ஆர்.ரவீந்திரன் தயாரிப்பில் மந்திர மூர்த்தி இயக்கத்தில் சசிகுமார் நடித்துள்ள திரைப்படம் ‘அயோத்தி’. அயோத்தியிலிருந்து  இராமேஸ்வரம் வருகிற வடநாட்டு குடும்பத்தினரை மையமாக வைத்து இப்படம் உருவாகியுள்ளது. 
கடந்த மார்ச் 3 ஆம் தேதி வெளியான இப்படம் விமர்சன ரீதியாக நல்ல வரவேற்பைப் பெற்று வருகிறது. இதில் சசிகுமாருடன் 'குக் வித் கோமாளி' புகழ், போஸ் வெங்கட் மற்றும் யஷ்பால் சர்மா உள்ளிட்டோர் நடித்துள்ளனர். கதை - எஸ்.ராமகிருஷ்ணன் எனக் குறிப்பிடப்படுகிறது.
இந்த நிலையில் அயோத்தி படத்தில் ஒவ்வொரு காட்சியும் செதுக்கப்பட்டுள்ளது என்று நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான் தெரிவித்துள்ளார்.


இதுகுறித்து அவர் விடுத்துள்ள அறிக்கையில், அயோத்தி திரைப்படத்தை நேற்று பார்த்து நெகிழ்ந்தேன். மதம், வேதம், தருமம் இதையெல்லாம் தாண்டியது மனிதம் என்பதை தான் இந்த கதை சொல்கிறது. அதை மிகவும் அழுத்தமாக இப்படம் சொல்கிறது.
இது பார்வையாளர்களுக்குள்ளும் மிகப்பெரிய ஒரு தாக்கத்தை ஏற்படுத்துகிறது. காரணம், ஒவ்வொரு காட்சியும் செதுக்கப்பட்டுள்ளது. உரையாடல்களும் அவ்வளவு நேர்த்தியாக இருக்கிறது. இப்படத்தை எல்லோரும் அவசியம் பார்த்து கொண்டாட வேண்டும். 

இப்படிப்பட்ட படங்களை மக்கள் பார்த்து கொண்டாடவில்லை என்றால், இதுபோன்ற படைப்புகள் திரைக்கு வருவது அரிதினும் அரிதாகிவிடும். அனைவரும் இப்படத்தை திரையரங்கில் சென்று பாருங்கள். மிகவும் அருமையான ஒரு உணர்வை இப்படம் உங்களுக்குள் கடத்திவிடும்.
மீண்டும் என் தம்பி சசிக்கு, தம்பி மந்திர மூர்த்திக்கு, தயாரிப்பாளர் இரவீந்திரனுக்கு என் அன்பும், நிறைந்த வாழ்த்துகளும். இந்த படம் மாபெரும் வெற்றியடைய நான் உளமார வாழ்த்துகிறேன். இவ்வாறு அவர் குறிப்பிட்டுள்ளார். 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

திமுக ஆட்சியில் நிம்மதி இழந்த மக்கள்: எடப்பாடி கே.பழனிசாமி

தொலைபேசி ஒட்டுக்கேட்பு வழக்கு: சாட்சியாக ஆஜராகிறாா் மத்திய அமைச்சா்

ஊத்துமலை பகுதியில் புதிய கால்வாய்: எடப்பாடி கே. பழனிசாமியிடம் மனு!

மாதவரத்தில் புதிய பேருந்து நிலையம் அமைக்கப்படும்: அமைச்சா் பி.கே.சேகா்பாபு

சகதியான சாலையில் உருண்டு அதிமுக வாா்டு உறுப்பினா் போராட்டம்

SCROLL FOR NEXT