பிரபுதேவா நடிப்பில் ப்ளாஷ்பேக் படத்தின் டிரைலரை படக்குழு இன்று வெளியிட்டுள்ளது.
பிரபுதேவா நடிப்பில் விரைவில் திரைக்கும் வரவிருக்கும் படம் ப்ளாஷ்பேக். இந்த படத்தில் பிரபுதேவாவுக்கு ஜோடியாக ரெஜினா நடித்துள்ளார். மேலும் இந்த படத்தில் தெலுங்கு நடிகை அனுசுயா, இளவரசு, உமா ரியாஸ், ஆர்யன் உள்ளிட்டோரும் நடித்துள்ளனர்.
இதையும் படிக்க- சிவகார்த்திகேயன் தயாரிப்பில் சூரி நடிக்கும் புதிய படம்(விடியோ)
படத்தை டான் சாண்டி இயக்கியுள்ளார். அபிஷேக் பிலிம்ஸ் தயாரிக்கும் படத்திற்கு சாம் சிஎஸ் இசையமைத்துள்ளார். மீசை அரும்புகிற இள வயதில் தன்னைவிட வயதில் மூத்த பெண்ணிடம் உருவாகும் காதலை மையப்படுத்தி படத்தின் கதை அமைக்கப்பட்டுள்ளது.
படப்பிடிப்பு சென்னை, கொடைக்கானல் உள்ளிட்ட இடங்களில் நடைபெற்றுள்ளது. இந்த நிலையில் ப்ளாஷ்பேக் படத்தின் டிரைலரை படக்குழு இன்று வெளியிட்டுள்ளது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.