முகப்பு
செய்திகள்

‘நேரம்’, ‘பிரேமம்’ பட நடிகரின் புதிய படம் குறித்த அப்டேட்! 

நேரம் படத்தின் மூல கவனம் பெற்ற நடிகர் அனந்த் நாக் புதிய படமொன்றில் நடித்து வருகிறார். 

செய்திகள்

‘நேரம்’, ‘பிரேமம்’ பட நடிகரின் புதிய படம் குறித்த அப்டேட்! 

நேரம் படத்தின் மூல கவனம் பெற்ற நடிகர் அனந்த் நாக் புதிய படமொன்றில் நடித்து வருகிறார். 

Updated On : 7 பிப்ரவரி, 2024 at 6:43 AM
பகிர்:

பிரபல மலையாள இயக்குநர் அல்போன்ஸ் புத்திரன் இயக்கத்தில் வெளியாகி நல்ல வரவேற்பினை பெற்ற நேரம், பிரேமம் படத்தில் நடித்த அன்ந்த நாக் தமிழில் பல படங்களில் துணை நடிகராக நடித்துள்ளார். சமீபத்தில் சுந்தர் சி இயக்கத்தில் வெளியான காஃபி வித் காதல் படத்திலும் ‘காலேஜ் ரோட்’ படத்திலும் நடித்துள்ளார். 

பிரேமம் படம் மலையாளத்தில் மட்டுமல்ல தமிழில் மிகுந்த வரவேற்பினை பெற்றது. இதில் சாய்பல்லவியுடன் அனந்த் நாக் நடித்திருப்பது சினிமா ரசிகர்களிடையே மிகுந்த வரவேற்பினை பெற்றது. 

தற்போது சுயாதீன திரைப்பட இயக்குநர் ஹரிதாஸ் எழுதி இயக்கி வரும் புதிய படத்தில் அனந்த் நாக் நடித்து வருகிறார். இந்தப் படத்தினை தினேஷ் ஐடி தயாரித்து இணைநடிகராகவும் நடித்து வருகிறார். ‘தற்செயலாக மூன்றாவது முறை’ என படத்திற்கு தலைப்பிடப்பட்டுள்ளது. 

தற்போது இந்தப் படத்தின் முதல்கட்ட படப்பிடிப்பு முடிவடைந்துள்ளது. விரைவில் படப்பிடிப்பு முடியுமென இயக்குநர் தெரிவித்துள்ளார். 

முழு கட்டுரையைப் படிக்க →