செய்திகள்

‘தங்கலான்’ படம் குறித்து மனம் திறந்த நடிகை பார்வதி!

பா. ரஞ்சித் இயக்கத்தில் உருவாகி வரும் தங்கலான் படம் குறித்து நடிகை பார்வதி கருத்து தெரிவித்துள்ளார். 

DIN

கோலார் தங்க சுரங்கத்தில் தமிழர்கள் பட்ட துயரத்தை அடிப்படையாக வைத்து பா.ரஞ்சித் இயக்கத்தில் விக்ரம் நடிப்பில் ‘தங்கலான்’ படம் உருவாகி வருகிறது.

நீண்ட இடைவேளைக்கு பிறகு தமிழில் பார்வதி நடிப்பது அவரது ரசிகர்களுக்கு உற்சாகத்தை ஏற்படுத்தியுள்ளது. மேலும் மாளவிகா மோகனன், பசுபதி உள்ளிட்டோரும் முக்கிய வேடங்களில் நடிக்கின்றனர். ஜி.வி.பிரகாஷ் இந்தப் படத்துக்கு இசையமைக்கிறார். 

படத்தின் படப்பிடிப்பு தற்போது கே.ஜி.எஃப்பில் நடைபெற்று வருவதால் படத்தின் மீதான எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது. சமீபத்தில் இந்தப் படத்தில் ஆங்கில நடிகர் டேனியல் கால்டகிரோன் இணைந்துள்ளார்.

பூ படத்தின் மூலம் தமிழில் அறிமுகமானவர் நடிகை பார்வதி. தனது 13 வருட சினிமா வாழ்க்கையில் தமிழில் குறைவான படங்கள் மட்டுமே நடித்துள்ளார். மலையாளத்தில் நல்ல கதைகளை தேர்வு செய்து சிறப்பாக நடித்து வருகிறார். தங்கலான் படம் குறித்து ஒரு நேர்காணலில் கூறியதாவது: 

நான் நடிகையாக நடிக்க இதுவரை கஷ்டப்பட்டதில்லை. ஆனால், தங்கலான் படத்தில் நடிப்பது மிகவும் கடினமாக இருந்தது. படப்பிடிப்பில் சில இடங்கள் மிகவும் பாராட்டும்படியாக இருந்தது. பழங்காலத்தில் எப்படி மக்கள் வாழ்ந்தார்கள் என்பது ஆச்சரியமாக இருக்கிறது. இதை தியேட்டரில் பார்க்கும்போது ரசிகர்களுக்கு நிச்சயமாக பெரிய விருந்தாக இருக்கும். 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

சோளிங்கரில் கேட்பாரற்று கிடந்த குழந்தை மீட்பு

மழை வருமோ... ராதிகா கௌஷிக்!

தீவிரமடையும் நெல் அறுவடைப் பணிகள்

உங்களை உணரும் கலை... தீப்தி சுனைனா!

ஹூண்டாய் புதிய வென்யூ கார் அறிமுகம் - புகைப்படங்கள்

SCROLL FOR NEXT