செய்திகள்

நீண்ட இடைவெளிக்குப் பிறகு சீரியலுக்கு வரும் பிரபல நடிகர்!

நடிகர் சஞ்சீவ் வெங்கட் விரைவில் கிழக்கு வாசல் சீரியலில் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

DIN

நடிகர் சஞ்சீவ் கிழக்கு வாசல் சீரியலில் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

சஞ்சீவ் பெரும்பாலான திரைப்படங்களில் நடிகர் விஜய்யின் நண்பராக துணை வேடங்களில் நடித்ததன் மூலம் தனது சினிமா பயணத்தைத் தொடங்கினார். அவர் 2002 இல் 'மெட்டி ஒலி' தொடர் மூலம் சின்னத்திரையில் நுழைந்தார்.

பல எதிர்மறை மற்றும் துணை கதாபாத்திரங்களைச் நடித்து வந்த சஞ்சீவ்,  'திருமதி செல்வம்' (2007-2013) தொடர் அவருக்கு திருப்புமுனையாக அமைந்தது.

இந்த நிலையில், நடிகர் சஞ்சீவ் வெங்கட் கிழக்கு வாசல் சீரியலில் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இத்தொடரின் தயாரிப்பாளரான நடிகை ராதிகா சரத்குமார் முக்கிய வேடத்தில் நடிக்கிறார்.

பூவே பூச்சூடவா தொடரில் நடித்த ரேஷ்மா இந்த சீரியலில் கதாநாயகியாக நடிக்கிறார். நடிகர் சஞ்சீவ் பல வருடங்களுக்குப் பிறகு மீண்டும் ஒரு தொலைக்காட்சி தொடரில் நடிக்கிறார்.  சஞ்சீவ் ரசிகர்கள் கிழக்கு வாசல் தொடருக்காக ஆவலுடன் காத்துக்கொண்டு உள்ளனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

முத்துக்கள் மலரும்... நிகிதா தத்தா!

பருவம்... மாளவிகா மேனன்!

கோல்டன்... திவ்ய பாரதி!

பஞ்சாப் வெள்ளத்தில் பாதிக்கப்பட்ட சிறுவன்.. ராகுல் காந்தி அளித்த பரிசு!

விஜய்க்கு கொள்கை, கோட்பாடு இல்லை; எனக்கும்தான் கூட்டம் வந்தது! - சரத்குமார்

SCROLL FOR NEXT