செய்திகள்

காற்றோட்டமில்லா குகை, 55 டிகிரி வெப்பநிலை, 22 நாள்கள்: ஜித்தன் ரமேஷின் துணிச்சலான படப்பிடிப்பு!

DIN

2005இல் வெளியான ஜித்தன் படத்தின் மூலம் தமிழ் ரசிகர்களின் கவனத்தை ஈர்த்தவர் தயாரிப்பாளர் ஆர்.பி. சௌத்ரியின் மகன் ரமேஷ். இவர் நடிகர் ஜீவாவின் சகோதரர் என்பதும் குறிப்பிடத்தக்கது. 

‘ஜித்தன்’ படத்தின் வெற்றி மூலம் ஜித்தன் ரமேஷ் என அழைக்கப்பட்டார். ஆனால் அந்தப் படத்திற்குப் பிறகு மற்றைய படங்கள் எதுவும் பெரிதாக வசூலை குவிக்காத்தால் அவருக்கான மார்க்கெட் இழந்தார். 

கடைசியாக 2019இல் வெளியான ‘உங்கள் போடனும் சார்’ படம் அவர் எதிர்பார்த்த வெற்றியை கொடுக்கவில்லை. பின்னர் பிக்பாஸ் 4இல் பங்கேற்று நல்ல புகழை பெற்றார். மீண்டும் சினிமாவில் வருவதற்கான ஆயுத்தமாக உள்ளதாக தெரிவித்திருந்தார். 

தற்போது அபிலாஷ் ஜி தேவன் எழுதி இயக்கும் புதிய படத்தில் நடித்து வருகிறார். ‘ரூட் நம்பர் 17’ என தலைப்பிடப்படுள்ள இந்தப் படத்திற்கு மலையால இசையமைப்பாளர் ஔச்சேப்பன் இசையமைக்க, பிரசாந்த் பிரணவன் ஒளிப்பதிவு செய்கிறார். 

இந்தப் படத்தின் இயக்குநர் ‘தாய் நிலம்’ 14 சர்வதேச விருதுகளை வென்றது குறிப்பிடத்தக்கது. 

இந்நிலையில் அவர் குகையில் செட் அமைத்து படப்பிடிப்பு நடைபெற்றுள்ளது. தென்காசிக்கு அருகில் உள்ள அடர்ந்த காடுகளுக்கு அருகில் தரை மட்டத்திற்கு கீழே அமைக்கப்பட்ட 5500 சதுர அடியில் குகையின் ஒரு முக்கிய காட்சியை அவர் படமாக்கியுள்ளார். இந்த காட்சிகளில் ஜித்தன் ரமேஷுடன் பல நடிகர்களும் நடித்துள்ளனர்.

55 டிகிரி செல்சியஸ் வெப்பநிலையில் காற்றோட்டம் இல்லாத குகையில் 22 நாள்களில் படப்பிடிப்பு நடைபெற்றுள்ளது. ஜித்தன் ரமேஷ் இதில் டூப் இல்லாமலே நடித்துள்ளார். இந்த குகைக் காட்சிகள் ரசிகர்களை மிகவும் ஈர்க்குமென இயக்குநர் நம்பிக்கையளித்துள்ளார். 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

ஐபிஎல் ஒளிபரப்பாளர்களை கடுமையாக விமர்சித்த ரோஹித் சர்மா!

தில்லி-கெய்ரோவை இணைக்கும் தினசரி விமான சேவையை முன்னெடுக்க எகிப்து ஏர் தீர்மானம்!

ஜுன் 4-ல் இந்தியா கூட்டணி ஆட்சியைக் கைப்பற்றும்: கேஜரிவால்

பொறியியல் கலந்தாய்வு: 1,73,792-ஐ கடந்த விண்ணப்பங்கள்

இந்த வாரம் கலாரசிகன் - 19-05-2024

SCROLL FOR NEXT