செய்திகள்

'பாண்டியன் ஸ்டோர்ஸ்' படப்பிடிப்பில் மீண்டும் விஜே தீபிகா!

'பாண்டியன் ஸ்டோர்ஸ்' தொடரில் நடிகை விஜே தீபிகா மீண்டும் களமிறங்கியுள்ளார். அவரின் படப்பிடிப்பு தொடங்கிய நிலையில், புகைப்படத்தை பதிவு செய்து அவரின் ரசிகர்கள் உறுதிப்படுத்தியுள்ளனர்.

DIN

'பாண்டியன் ஸ்டோர்ஸ்' தொடரில் நடிகை விஜே தீபிகா மீண்டும் களமிறங்கியுள்ளார். அவரின் படப்பிடிப்பு தொடங்கிய நிலையில், புகைப்படத்தை பதிவு செய்து அவரின் ரசிகர்கள் உறுதிப்படுத்தியுள்ளனர்.

விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும் தொடர்கள் மக்கள் மத்தியில் மிகுந்த வரவேற்பைப் பெற்றவை.  அந்தவகையில் இரவு நேரத்தில் ஒளிபரப்பாகி வரும் 'பாண்டியன் ஸ்டோர்ஸ்' தொடர் கிராமத்துப் பின்னணியில் கதைக்களம் அமைக்கப்பட்டு ஒளிபரப்பாகி வருகிறது. இதனால் இந்தத்தொடருக்கு வரவேற்பு அதிகம்.

சகோதரர்கள் 4 பேர் மற்றும் அவர்களுக்கு வரும் மனைவிகள் ஆகியோரே பிரதான கதாபாத்திரங்கள். சுஜிதா, ஸ்டாலின், குமரன் தங்கராஜன், ஷீலா உள்ளிட்ட பலர் நடித்து வருகின்றனர். 

இந்தத் தொடரில் பல நடிகர்கள் அடிக்கடி மாறுவது வழக்கமாகியுள்ளது. அந்தவகையில், சமீபத்தில் 'ஐஸ்வர்யா' கதாபாத்திரத்தில் நடித்துவந்த சாய் காயத்தில் 'பாண்டியன் ஸ்டோர்ஸ்' தொடரிலிருந்து விலகுவதாக அறிவித்தார். 

நான்கு ஆண்டுகளாக பாண்டியன் ஸ்டோர்ஸ் தொடர் ஒளிபரப்பாகி வருகிறது. இந்த தொடரில் இதுவரை நிறைய நடிகைகள் மாற்றப்பட்டுள்ளனர். முல்லை கதாபாத்திரத்தில் இதுவரை 3 பேரும், ஐஸ்வர்யா கதாபாத்திரத்தில் 3 பேரும் மாற்றப்பட்டுள்ளனர்.

சாய் காயத்ரிக்கு பதிலாக ஐஸ்வர்யா பாத்திரத்தில் முன்பு நடித்துவந்த விஜே தீபிகா மீண்டும் அதே பாத்திரத்தில் நடிப்பார் என்றும் அறிவிக்கப்பட்டிருந்தது. 

தற்போது விஜே தீபிகா 'பாண்டியன் ஸ்டோர்ஸ்' தொடரில் நடிக்கும் புகைப்படம் வெளியாகியுள்ளது. நீண்ட இடைவேளைக்குப் பிறகு அதே தொடரில் அதே பாத்திரத்தில் மீண்டும் நடிப்பதால், தீபிகா மட்டுமின்றி அவரின் ரசிகர்களும் உற்சாகமடைந்துள்ளனர். 

 பாண்டியன் ஸ்டோர்ஸ் படப்பிடிப்பில் சகநடிகைகளுடன் விஜே தீபிகா

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

தமிழ்ப்புதல்வன், புதுமைப்பெண் திட்டங்களில் 20,428 மாணவா்கள் பயன்

காவல் துறை வாகனங்கள் ஆய்வு

மயிலாடுதுறை நீதிமன்றத்தில் வட்ட சட்ட பணிகள் குழு கூட்டம்

ஜிப்மரில் வேலை வாங்கித் தருவதாக போலி ஆவணம் தயாரித்து பணம் பறிக்க முயன்ற இருவா் கைது

‘மாணவா்கள் போதைப் பழக்கத்துக்கு அடிமையாகிவிட வேண்டாம்‘

SCROLL FOR NEXT