இந்திய கிரிக்கெட் வீரர் சன்சு சாம்சன் நடிகர் ரஜினி காந்தை அவரது வீட்டில் சந்த்தித்தார். 28 வயதான கேரளத்தில் பிறந்த சாம்சன் இந்திய கிரிக்கெட் அணியின் விக்கெட் கீப்பர் பேட்டர். மேலும் ஐபிஎல்லில் ராஜஸ்தான் அணியின் கேப்டன்.
அதிரடியாகவும் பெரிய உழைப்பில்லாமல் சிக்ஸர்களை அடிப்பதிலும் சிறப்பு பெற்றவர். சிறிய வயதிலிருந்தே நடிகர் ரஜினியின் ரசிகர் என்று பல்வேறு நேர்காணல்களில் தெரிவித்துள்ளார். தற்போது அவரது கனவு நனவாகியுள்ளது.
ஐபிஎல் 2023 மார்ச் மாதம் 31ஆம் தேதி தொடங்குகிறது. சாம்சன் இதற்கு தீவிரமாக பயிற்சி எடுத்து வருகிறார். நடிகர் ரஜினி நெல்சன் இயக்கத்தில் ’ஜெயிலர்’ படத்தில் நடித்து வருகிறார்.
நடிகர் ரஜினியின் அழைப்பின் பேரில் சாம்சன் நேற்று (ஞாயிற்றுக்கிழமை) அவரது வீட்டிற்கு சென்று சந்தித்துள்ளார். சாம்சன் தனது ட்விட்டர் பக்கத்தில் இது குறித்து கூறியதாவது:
7 வயதில் இருந்தே நான் சூப்பர் ஸ்டார் ரஜினியின் ரசிகன். அப்போதிலிருந்தே எனது பெற்றோர்களிடன் கூறி வந்தேன் நிச்சயம் ஒருநாள் ரஜினியை அவரது வீட்டில் சென்று சந்திப்பேன் என. தலைவர் என்னை அவரது வீட்டிற்கு அழைத்ததன் மூலம் 21 ஆண்டுகள் கழித்து எனது கனவு நனவானது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.