செய்திகள்

நேபாள நிலநடுக்கத்திலிருந்து உயிர் தப்பிய நடிகைக்கு ஆஸ்கர்! 

சிறந்த நடிகைக்கான ஆஸ்கர் விருதை வென்றவர் நேபாள நிலநடுக்கத்தில் இருந்து உயிர் பிழைத்தவர்.

IANS

அமெரிக்காவின் ஹாலிவுட்டில் உள்ள டால்பி தியேட்டரில் இன்று காலை(இந்திய நேரப்படி) 95-வது ஆஸ்கர் விருது வழங்கும் நிகழ்வு நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில் சிறந்த மூலப்பாடல் பிரிவில் பரிந்துரைக்கப்பட்டிருந்த இந்தியாவின் ஆர்ஆர்ஆர் படத்தின் நாட்டு நாட்டு பாடலும், சிறந்த ஆவணப்படப் பிரிவில் இந்தியாவின் தி எலிஃபன்ட் விஸ்பரர்ஸ் படமும் விருதை பெற்றுள்ளது.

சிறந்த நடிகைக்கான விருது மலேசிய நடிகையான 60வயதான மிச்செல் இயோஹோவுக்கு கிடைத்தது. ‘எவிரிதிங் எவிரிவேர் ஆர் அட் ஒன்ஸ்’ திரைப்படத்திற்காக இந்த விருது கிடைத்தது. இந்தப் படம் பல்வேறு பிரிவுகளில் 7 விருதுகளை பெற்றது குறிப்பிடத்தக்கது.  ஆசியாவிலேயே முதன்முறையாக ஆஸ்கரில் சிறந்த நடிகை விருது பெற்ற நடிகையும் இவரே என்பது குறிப்பிடத்தக்கது. 

இவருக்கும் இந்தியாவிற்கு உள்ள தொடர்பு:

மிச்செல் யோவுக்கும் இந்தியாவிற்கும் இணைப்பு உள்ளது. இமயமலை முழுவதும் 1000 மடங்களுக்கு மேல் உள்ள இந்தியாவை தளமாகக் கொண்ட ட்ருக்பா அமைப்பின் ஆன்மீகத் தலைவரான புத்த மதத் தலைவர் கியால்வாங் ட்ருக்பா அவரது வாழ்க்கையின் 'பின்னணியில்' உள்ளார். 

கியால்வாங் ட்ருக்பாயின் சீடரான மிச்செல் அவரது ஆலோசனையின் பேரில் நேபாள நிலநடுக்கத்தால் பாதிக்கப்பட்டவர்களுக்கு ஹாலிவுட்டில் இருந்து தனது 'லைவ் டு லவ்' அறக்கட்டளைக்காக நிதி திரட்டினார்.

2015இல் நடந்த நேபாள நிலநடுக்கத்தில் 9000 பேர் இறந்தனர். 21ஆயிரம் பேருக்கு மேல் பாதிக்கப்பட்டனர். அதிகபட்ச சேதாரமும் நிகழ்ந்தது. இந்த நிலநடுக்கத்தில் மிச்செல் இயோவும் அவரது கணவரும் சிக்கிக் கொண்டனர். பின்னர் அங்கிருந்து வெளியேறி மீண்டும் நேபாளம் வந்து பாதிக்கப்பட்ட மக்களுக்கு மறுவாழ்வளித்தார். 

புத்த மதத்தின் மீது நம்பிக்கையுள்ளவர். ஐக்கியநாடுகள் முன்னேற்ற அமைப்புடன் சேர்ந்து தரமான சாலைகள் அமைக்க தொடர்ந்து பங்களித்து வருகிறார். இதன் நல்லெண்ண தூதுவராகவும் பொறுப்பு வகிப்பது குறிப்பிடத்தக்கது. ஹெச்ஐவி நோயாளிகளுக்காகவும் பல வருடங்களாக போராடி வருகிறார். 

இந்த நிலநடுக்கத்திற்குப் பிறகு ஐஏஎன்எஸ்க்கு அளித்த பேட்டியில் மிச்செல், “நேபாள மக்களுக்கு இன்னமும் விழிப்புணர்வு ஏற்படுத்துவது முக்கியமான பங்கு எனக்கிருக்கிறது. என்ன நடந்ததோ அது உண்மை, மக்களது வாழ்வாதாரத்தை மேம்படுத்த அதிகமான வேலைகள் உள்ளது. எனது சிறந்த நடிப்பு இனிமேல்தான் வரும்” எனக் கூறியிருந்தார்.  விருது வாங்கியப் பின், “பெண்களே, நீங்கள் எப்பொழுதும் உங்கள் சிறந்த காலத்தை கடந்துவிட்டீர்கள் என்று யாரும் சொல்லும்படி வைத்துக்கொள்ளாதீர்கள்" எனக் கூறினார். 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

”5 தொகுதிகளைக் கேட்டுள்ளோம்!” காதர் மொகிதீன் தகவல்! | DMK

துரந்தர் - டாக்ஸிக்... தாவீது - கோலியாத்... ராம் கோபால் வர்மாவின் 10 உண்மைகள்!

சிலம்பரசனை இயக்கும் டியூட் இயக்குநர்?

உலக கிரிக்கெட்டில் இந்தியா ஆதிக்கம் செலுத்த விரும்புகிறேன்: ஸ்மிருதி மந்தனா

மு.க. ஸ்டாலினை இன்று இரவு சந்திக்கிறார் கே.சி. வேணுகோபால்!

SCROLL FOR NEXT