செய்திகள்

‘இதுதான் எனது சிறந்த இசையாக இருக்கும்’- ஜவான் படம் குறித்து அனிருத்! 

இசையமைப்பாளர் அனிருத் ஜவான் திரைப்படம் குறித்து புகழ்ந்து கூறியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. 

DIN

தமிழில் விஜய்யை வைத்து பிகில், மெர்சல், தெறி என்று மூன்று சூப்பர் ஹிட் படங்களைத் தந்த அட்லி, ஷாருக் கானின் ஜவான் படத்தின் மூலம் ஹிந்தியில் இயக்குநராக அறிமுகமாகிறார்.

இப்படத்தின் நாயகியாக நயன்தாரா நடிக்கிறார். விஜய் சேதுபதி, யோகி பாபு, பிரியாமணி உள்ளிட்டோரும் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கின்றனர். இசை - அனிருத். ஜவான் படத்திற்காக நடிகர் ஷாருக்கானுடன் 200 பெண் ஸ்டண்ட் கலைஞர்கள் சண்டையிட்ட காட்சி படமாக்கப்பட்டுள்ளது என ஏற்கனவே தகவல்கள் வெளியானது.

யானிக் பென் என்பவர் இந்தப் படத்திற்கு சண்டைப் பயிற்சியாளராக பணியாற்றி வருகிறார். இவருடன் இன்னும் பலர் சண்டைக்காட்சிகளுக்கென்றே பிரத்யேகமாக பங்குபெற்றுள்ளது குறிப்பிடத்தக்கது. 

சமீபத்தில் இந்தப் படத்திலிருந்து ஷாருக்கான் வெறித்தனமாக சண்டையிடும் 6 நொடி சண்டைக்காட்சிகள் இணையத்தில் வெளியாகி டிரெண்டானது.இந்தப் படத்தில் முதன்முறையாக அனிருத் அட்லியுடன் இணைந்து பணியாற்றியுள்ளார்.

“ஷாருக்கானை பார்த்து வளர்ந்தவன் நான். இதுவரை நான் இசை அமைத்ததிலேயே இந்தப் படத்தில்தான் சிறப்பாக இருக்கும். இது அவருக்கான சமர்ப்பணமாக இருக்கும்” என அனிருத் கூறியதாக தகவல் வெளியாகியுள்ளது. 

தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம், ஹிந்தி மொழிகளில் படம் வெளியாக உள்ளது. மேலும், நடிகர் விஜய் கௌரவ தோற்றத்தில் நடிக்க உள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளது குறிப்பிட்டத்தக்கது. 
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

ஆட்சியா் அலுவலகத்தில் கல்விக் கடன் முகாம்: 22 மாணவா்களுக்கு ரூ.2.32 கோடி கடன் உதவி

மயிலக்கா

உத்தமபாளையம் அருகே வாலிபருக்கு கத்திக்குத்து: ஒருவா் கைது

காரைக்குடி ரயில் நிலையத்தில் ரயில்வே கோட்ட மேலாளா் ஆய்வு

தூய செங்கோல் மாதா சப்பர பவனித் திருவிழா

SCROLL FOR NEXT