செய்திகள்

ஜவான் வெளியீட்டுத் தேதியில் மாற்றம்..

ஷாருக்கான் நடிக்கும் ஜவான் திரைப்படத்தின் வெளியீடு ஒத்திவைக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

DIN

ஷாருக்கான் நடிக்கும் ஜவான் திரைப்படத்தின் வெளியீடு ஒத்திவைக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

தமிழில் விஜய்யை வைத்து பிகில், மெர்சல், தெறி என்று மூன்று சூப்பர் ஹிட் படங்களைத் தந்த அட்லி, ஷாருக் கானின் ஜவான் படத்தின் மூலம் ஹிந்தியில் இயக்குநராக அறிமுகமாகிறார்.

இப்படத்தின் நாயகியாக நயன்தாரா நடிக்கிறார். விஜய் சேதுபதி, யோகி பாபு, பிரியாமணி உள்ளிட்டோரும் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கின்றனர். இசை - அனிருத். ஜவான் படத்திற்காக நடிகர் ஷாருக்கானுடன் 200 பெண் ஸ்டண்ட் கலைஞர்கள் சண்டையிட்ட காட்சி படமாக்கப்பட்டுள்ளது என ஏற்கனவே தகவல்கள் வெளியானது.

யானிக் பென் என்பவர் இந்தப் படத்திற்கு சண்டைப் பயிற்சியாளராக பணியாற்றி வருகிறார். இவருடன் இன்னும் பலர் சண்டைக்காட்சிகளுக்கென்றே பிரத்யேகமாக பங்குபெற்றுள்ளது குறிப்பிடத்தக்கது. 

சமீபத்தில் இந்தப் படத்திலிருந்து ஷாருக்கான் வெறித்தனமாக சண்டையிடும் 6 நொடி சண்டைக்காட்சிகள் இணையத்தில் வெளியாகி டிரெண்டானது.

இந்நிலையில், வருகிற ஜூன் 2 ஆம் தேதி ஜவான் வெளியாக இருந்தது. தற்போது, இப்படத்தை அக்டோபர் மாதம் திரைக்குக் கொண்டு வர படக்குழுவினர் திட்டமிட்டுள்ளதாக புதிய தகவல் வெளியாகியுள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

திருப்பூரில் தேங்கிக் கிடக்கும் குப்பைகளை அகற்றும் பணி தொடக்கம்

வெற்றி பெறுமா விஜயின் வியூகம்..? பி.விஸ்வநாதன், செயலர், அகில இந்திய காங்கிரஸ்.

செப்டம்பரில் 36.76 டிஎம்சி காவிரி நீரை திறந்துவிட தமிழகம் வலியுறுத்தல்

"குடியரசு துணைத் தலைவர் வேட்பாளராக தமிழகத்தைச் சேர்ந்த சி.பி.ராதாகிருஷ்ணன் அறிவிக்கப்பட்டுள்ளது' குறித்து...வாசகர்களிடம் இருந்து வந்த கருத்துகளில் சில...

வாழ்க்கைத் துணையாகும் வாசிப்பு

SCROLL FOR NEXT