செய்திகள்

'எதிர்நீச்சல்' நாயகிகள் குழந்தைகளாக இருந்தால்... வைரல் படங்கள்!

கனிகா, ஹரிப்பிரியா இசை, மதுமிதா, பிரியதர்ஷினி ஆகியோர் எதிரீச்சல் பாத்திரங்களில் குழந்தைகளாக இருந்தால் எப்படி இருக்கும் என்பது போன்ற படங்கள் ரசிகர்களால் அதிகம் பகிரப்பட்டு வருகிறது.

DIN

'எதிர்நீச்சல்' தொடரில் நடித்துவரும் நாயகிகள் குழந்தைகளாக இருந்தால் எப்படி இருக்கும் என்பது போன்ற புகைப்படங்கள் இணையத்தில் ரசிகர்களால் அதிகம் பகிரப்பட்டு வருகிறது. 

சன் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும் தொடர்கள் மக்கள் மத்தியில் மிகுந்த வரவேற்பைப் பெற்றுள்ளன. குறிப்பாக, இரவு 9.30 மணிக்கு ஒளிபரப்பாகும் 'எதிர்நீச்சல்' தொடருக்கு அதிக அளவிலான ரசிகர்கள் உள்ளனர். 

பிற்போக்குத் தனமான வீட்டில் திருமணமாகி சென்ற இளம்பெண்கள் சந்திக்கும் இன்னல்களை மையப்படுத்தியது 'எதிர்நீச்சல்' தொடர். பெண்கள் மேம்பாட்டை மையப்படுத்தி எடுக்கப்படும் இந்தத் தொடருக்கு குடும்பத் தலைவிகள் மட்டுமின்றி இளம் தலைமுறையைச் சேர்ந்த பலரும் ரசிகர்களாக உள்ளனர். பலதரப்பட்ட ஆண் ரசிகர்களையும் இந்தத் தொடர் பெற்றுள்ளது. 

கோலங்கள் தொடரை இயக்கிய திருச்செல்வம் 'எதிர்நீச்சல்' தொடரை இயக்குகிறார். அதில் ஆர்த்தி பாத்திரத்தில் நடித்த ஸ்ரீவித்யா வசனம் எழுதுகிறார்.

இந்தத் தொடரில் நடிக்கும் மதுமிதா, சபரி பிரசாந்த், கனிகா, பிரியதர்ஷினி, ஹரிப்ரியா இசை உள்ளிட்டோருக்கு சமூக வலைதளங்களிலும் அதிக அளவிலான ரசிகர்கள் உள்ளனர். 

இந்நிலையில் 'எதிர்நீச்சல்' தொடரில் முதன்மை பாத்திரத்தில் நடிக்கும் கனிகா, ஹரிப்பிரியா இசை, மதுமிதா, பிரியதர்ஷினி ஆகியோர் எதிர்நீச்சல் பாத்திரங்களில் குழந்தைகளாக இருந்தால் எப்படி இருக்கும் என்பது போன்ற படங்கள் ரசிகர்களால் அதிகம் பகிரப்பட்டு வருகிறது.

ஃபேஸ் ஆப் மூலமாக ஒரு புகைப்படத்தின் குழந்தை வயது புகைப்படமாக மாற்ற இயலும். அதன்மூலம் 'எதிர்நீச்சல்' கதாபாத்திரங்கள் குழந்தைகளாக மாற்றியுள்ளனர். இந்தப் படங்கள் மிகவும் அழகாக இருப்பதாக பலர் பாராட்டு தெரிவித்து வருகின்றனர். 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பைக்கிலிருந்து தவறி விழுந்த பெண் உயிரிழப்பு

சோளிங்கரில் கேட்பாரற்று கிடந்த குழந்தை மீட்பு

மாநகராட்சிப் பகுதியில் குவிந்துள்ள குப்பைகளால் நோய் பரவும் அபாயம்

அரசுப் பேருந்து, காா்களை சேதப்படுத்தியதாக 7 போ் கைது

ஜி.கே. உலகப் பள்ளியில் பேட்மிண்டன் அகாதெமி திறப்பு

SCROLL FOR NEXT