செய்திகள்

பிரபல ஹாலிவுட் இயக்குநரின் கடைசி திரைப்படம் இதுதானா?

பிரபல ஹாலிவுட் இயக்குநரின் கடைசி திரைப்படம் குறித்து தகவல் வெளியாகியுள்ளது.

DIN

பிரபல ஹாலிவுட் இயக்குநரின் கடைசி திரைப்படம் குறித்து தகவல் வெளியாகியுள்ளது.

ஹாலிவுட்டின் பிரபல இயக்குநர்களில் ஒருவர் குவெண்டின் டாரன்டினோ(59). இவரது ’பல்ஃப் பிக்‌ஷன்’, ‘கில் பில்’, ‘இன்குளோரியஸ் பாஸ்டட்ஸ்’, ‘ஜாங்கோ அன்செயிண்டு’ உள்ளிட்ட படங்கள் உலகளவில் பெரும் வரவேற்பைப் பெற்றவை. 

தனித்துவமான இயக்குநராக அறியப்படும் டாரன்டினோ ஆஸ்கர், கோல்டன் குளோப் உள்ளிட்ட பல விருதுகளைப் பெற்றுள்ளார்.

இந்நிலையில், அவரின் 10-வது திரைப்படமாக ‘தி பிலிம் க்ரிட்டிக்’ படம் உருவாகவுள்ளதாகவும் இதுவே அவரின் கடைசி திரைப்படம் என்றும் தகவல் வெளியாகியுள்ளது. 

இப்படம் அமெரிக்காவின் பிரபல சினிமா விமர்சகரான பவுலின் கேலியின் வாழ்க்கையை மையப்படுத்தி உருவாகிறது.

டாரன்டினோ திரைப்படங்களில் இடம்பெறும் வன்முறைக் காட்சிகளுக்கென்ற தனி ரசிகர்கள் பட்டாளம் உண்டு. அவரின் இந்த இறுதிப்பட அறிவிப்பால்  ரசிகர்கள் அதிர்ச்சியடைந்துள்ளனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

தள்ளிப்போகும் நானியின் தி பாரடைஸ் பட வெளியீடு!

நமீபியாவுக்கு எதிராக இந்தியா பேட்டிங்; பிளேயிங் லெவனில் சஞ்சு சாம்சன்!

புதிய தொழிலாளர் நல சட்டத்திற்கு எதிராக ரயில் மறியலில் ஈடுபட்ட தொழிற்சங்கத்தினர்!

நேபாளத்தை 10 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வீழ்த்தி இத்தாலி அபார வெற்றி!

இந்த வாரம் ஓடிடியில் வெளியாகும் படங்கள்!

SCROLL FOR NEXT