செய்திகள்

சீதாராமன் தொடரிலிருந்து விலகும் முக்கிய நடிகை!

சீதாராமன் தொடரிலிருந்து விலகுவதாக நடிகை நடிகை ராணி அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளார். 

DIN

சீதாராமன் தொடரிலிருந்து விலகுவதாக நடிகை ராணி அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளார். 

ஏற்கனவே அவர் விலகுவதாக வதந்திகள் பரவிய நிலையில், நடிகை ராணி அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளார்.  அவருக்கு பதிலாக 'தமிழும் சரஸ்வதியும்' தொடரில் எதிர்மறை(வில்லி) கதாபாத்திரத்தில் நடித்துவரும் நடிகை ரேகா கிருஷ்ணப்பா நடிக்கவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

நடிகை ராணி தன்னுடைய இன்ஸ்டாகிராம் பதிவில், "ஆம்! அதிகாரப்பூர்வமாக, நான் சீதாராமன் தொடரில் இருந்து விலகிவிட்டேன். சில தனிப்பட்ட காரணங்களால் சீதாராமன் தொடரை விட்டு விலகுகிறேன், இந்த தொடரில் உள்ள அனைவரையும் நிச்சயமாக மிஸ் செய்கிறேன். எனக்கு எல்லா வழிகளில் ஆதரவளித்த அனைவருக்கும் மிக்க நன்றி." எனத் தெரிவித்துள்ளார்.

சீதாராமன் தொடரில் பிரியங்கா நல்காரி, ஜெய் டிசோசா, மற்றும் ரேஷ்மா பசுப்புலேட்டி ஆகியோர் முக்கிய வேடங்களில் நடித்துள்ளனர். 

மேலும் அக்ஷிதா போப்பையா, ஆர்.ஷ்யாம், சாக்ஷி சிவா, வினோதினி, மீனா செல்லமுத்து, பிரகாஷ் ராஜன், பிரபாகரன், ஹரி கிருஷ்ணன், நான்சி உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

நெல்லை வந்தே பாரத் ரயில் விருத்தாசலத்தில் நின்று செல்லும்!

178 ரன்கள், 7 விக்கெட்டுகள்... சாதனையுடன் சொந்த ஊரில் ஆட்ட நாயகனான அலெக்ஸ் கேரி!

கிறிஸ்துமஸ் கொண்டாட்டத்தில் விஜய் நாளை பங்கேற்பு!

100க்கு 100 புள்ளிகள்... டபிள்யூடிசி தரவரிசையில் முதலிடத்தில் நீடிக்கும் ஆஸி.!

இறந்த குழந்தையை பையில் கொண்டு சென்ற அவலம்!

SCROLL FOR NEXT