கவினுக்கு ஜோடியாகும் சூர்யா பட நாயகி!
கவினின் அடுத்தப் படத்தில் கவினுக்கு ஜோடியாக சூர்யா பட நாயகி நடிக்கவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
கவினின் அடுத்தப் படத்தில் கவினுக்கு ஜோடியாக சூர்யா பட நாயகி நடிக்கவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
கணேஷ் கே.பாபு இயக்கத்தில் நடிகர் கவின் நடிப்பில் வெளியான ‘டாடா’ திரைப்படம் பெரிய வரவேற்பைப் பெற்றதுடன் வசூல் ரீதியாகவும் வெற்றிப் படமாக அமைந்தது.
தொடர்ந்து, கவின் அடுத்ததாக பிரபல நடன இயக்குநர் சதிஷ் இயக்கத்தில் நாயகனாக நடிக்க உள்ளதாகவும் இப்படத்திற்கு அனிருத் இசையமைப்பார் என்றும் தகவல் வெளியானது.
Advertisement
இந்த நிலையில், கவினுக்கு ஜோடியாக பிரியங்கா மோகன் நடிக்கவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
இதையும் படிக்க: ‘அயோத்தி’ ஓடிடி வெளியீட்டுத் தேதி அறிவிப்பு!
சிவகார்த்திகேயனின் டாக்டர், டான் மற்றும் சூர்யாவின் எதற்கும் துணிந்தவன் ஆகிய படங்களில் நடித்த பிரியங்கா மோகன், தற்போது தனுஷின் கேப்டன் மில்லர் உள்பட ஒரு சில படங்களில் நடித்து வருகிறார்.