நடிகர் அஜித் குமாரின் புதிய படம் விடாமுயற்சி
நடிகர் அஜித் குமாரின் பிறந்தநாளில் அவரது புதிய படம் தொடர்பான அறிவிப்பு வெளியாகியுள்ளது.
நடிகர் அஜித் குமாரின் பிறந்தநாளில் அவரது புதிய படம் தொடர்பான அறிவிப்பு வெளியாகியுள்ளது.
துணிவு படத்தைத் தொடர்ந்து அஜித்தின் புதிய படத்தை யார் இயக்குவார் என்கிற எதிர்பார்ப்பு ரசிகர்கள் மத்தியில் இருந்து. தற்போது அந்த எதிர்பார்ப்புக்கு விடை கிடைத்துள்ளது. அஜித் குமாரின் பிறந்தநாளை முன்னிட்டு அவரின் புதிய படம் குறித்த அதிகாரபூர்வ அறிவிப்பு வெளியாகியுள்ளது.
அதன்படி அஜித்தின் அடுத்தப் படத்தை இயக்குநர் மகிழ் திருமேனி இயக்குவார் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் படத்துக்கு விடாமுயற்சி எனவும் தலைப்பு வைத்துள்ளன்ர். லைகா நிறுவனம் தயாரிக்கும் இந்த படத்துக்கு அனிருத் இசையமைக்கிறார். நிரவ் ஷா ஒளிப்பதிவு செய்கிறார்.
இதனை அஜித் ரசிகர்கள் கொண்டாடி வருகின்றனர். முன்னதாக நடிகர் அஜித் குமாரின் அடுத்த படமான ஏகே 62 படத்தை இயக்குநர் விக்னேஷ் சிவன் இயக்குவதாக இருந்தது. இந்த நிலையில் கதை குளறுபடியால் தற்போது அந்த வாய்ப்பு இயக்குநர் மகிழ் திருமேனிக்கு கைமாறியுள்ளது குறிப்பிடத்தக்கது.