செய்திகள்

பிரபல தொடருக்கு வில்லானாகும் பிரிவோம் சந்திப்போம் நடிகர்!

கிழக்கு வாசல் தொடரில் பிரிவோம் சந்திப்போம் சீரியலில் நடித்த தினேஷ் கோபாலசாமி வில்லனாக நடிக்கவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

DIN

கிழக்கு வாசல் தொடரில் பிரிவோம் சந்திப்போம் சீரியலில் நடித்த தினேஷ் கோபாலசாமி வில்லனாக நடிக்கவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

தினேஷ் கோபாலசாமி பிரிவோம் சந்திப்போம் தொடரில் கார்த்திக் கதாபாத்திரத்தில் நடித்திருந்தார். பின்னர், பூவே பூச்சூடவா தொடரில் நடித்தார். தற்போது கிழக்கு வாசல் தொடரில் இணைந்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

இவர் கிழக்கு வாசல் தொடரில் வில்லனாக நடிக்கவுள்ளதாக கூறப்படுகிறது.  இந்த சீரியலில் இருந்து சஞ்சீவ் விலகுவதாக வதந்தி பரவிய நிலையில், சமீபத்தில், அவர்  கிழக்கு வாசல்  தொடரில் இருந்து விலகுவதாக தனது இன்ஸ்டாகிராம் பதிவில் அதிகார்வபூர்வமாக தெரிவித்தார். 

சஞ்சீவுக்கு பதிலாக பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியலில் நடித்துவரும் வெங்கட், கிழக்கு வாசல் தொடரில் முக்கிய கதாபாத்தில் நடிக்கவுள்ளார். இவருடன் ரேஷ்மா, ராதிகா சரத்குமார், எஸ்.ஏ. சந்திரசேகர் ஆகியோர் முக்கிய கதாபாத்திரத்தில்  நடிக்கவுள்ளனர்.
 
பிரிவோம் சந்திப்போம், பூவே பூச்சூடவா, புது கவிதை, செம்பருத்தி, நாச்சியார்புரம், ஈரமான ரோஜாவே 2, கார்த்திகை தீபம் உள்ளிட்ட பல தொடர்களில் தினேஷ் கோபாலசாமி நடித்துள்ளார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

ராகுல் காந்தி நாளை காலை செய்தியாளர்களுடன் சிறப்புச் சந்திப்பு: என்ன சொல்லப் போகிறார்?

சமதா இஷ்டி யாகத்துக்கான கலசங்கள் ஒப்படைப்பு

பனித்துளி... பிரியங்கா மோகன்!

செவ்வானம்... திவ்ய பாரதி!

மேகம்... ரித்திகா நாயக்!

SCROLL FOR NEXT