செய்திகள்

மீண்டும் சின்னத்திரையில் பெப்சி உமா!

மீண்டும் சின்னத்திரைக்குள் நுழைவதாக பெப்சி உமா அறிவித்துள்ளார். இதனால் அவருடைய ரசிகர்கள் மகிழ்ச்சியடைந்துள்ளனர்.

DIN

மீண்டும் சின்னத்திரைக்குள் நுழைவதாக பெப்சி உமா அறிவித்துள்ளார். இதனால் அவருடைய ரசிகர்கள் மகிழ்ச்சியடைந்துள்ளனர்.

பெப்சி உங்கள் சாய்ஸ் என்ற நிகழ்ச்சியை பெப்சி உமா  15 ஆண்டுகளாக தொகுத்து வழங்கி வந்தார். இவருக்கு சினிமா நடிகைகளுக்கு இணையாக ஏராளான ரசிகர் கூட்டம் உள்ளது. இவருக்கு பட வாய்ப்புகள் கிடைத்தும் சினிமாவுக்குள் செல்லாமல் இருந்துவிட்டார்.

90களில் தொகுப்பாளர் என்றால் பெப்சி உமா தான். அதற்கு காரணம் அவருடைய கனிவான பேச்சு, சிரித்த முகம், தமிழ் பேசும் விதம் ஆகியவையாகும்.  இந்நிலையில் பல ஆண்டுகளாக எங்கே போனார் என தெரியாமல் இருந்தார்.

சமீபத்தில், விருது வழங்கும் விழாவில் பெப்சி உமா கலந்து கொண்டார். அந்நிகழ்ச்சியில் தொகுப்பாளர் ஒருவர் மீண்டும் சின்னத்திரைக்கு வருவீர்களா என்ற கேள்விக்கு, நீங்கள் சின்னத்திரையில் விரைவில் எதிர்பார்க்கலாம் என்று கூறினார்.

மீண்டும் சின்னத்திரைக்குள் நுழைவதாக கூறிய பெப்சி உமாவின் அறிவிப்பால் அவருடைய ரசிகர்கள் உற்சாகத்தில் உள்ளனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

தீபாவளி பண்டிகை: 6,630 பட்டாசுக் கடைகளுக்கு அனுமதி

இருமல் மருந்து விவகாரம்: தமிழகத்தைச் சோ்ந்த ரங்கநாதனுக்கு 10 நாள் போலீஸ் காவல்!

முதுநிலைப் பட்டதாரி ஆசிரியா் தோ்வு: ஒத்திவைக்க உயா்நீதிமன்றம் மறுப்பு

பணியாளா் நியமன முறைகேடு: மேற்கு வங்க அமைச்சா் சுஜித் போஸ் வீட்டில் அமலாக்கத் துறை சோதனை

பருவமழைக்கு முன்பு வெள்ளத் தணிப்புப் பணிகள்: அமைச்சா் துரைமுருகன் அறிவுறுத்தல்

SCROLL FOR NEXT