மனோபாலா மறைவு: நடிகர் ரஜினிகாந்த் இரங்கல்
இயக்குநரும், நடிகருமான மனோபாலாவின் மறைவுக்கு நடிகர் ரஜினிகாந்த் இரங்கல் தெரிவித்துள்ளார்.
பிரபல இயக்குநரும், நடிகருமான மனோபாலாவின் மறைவுக்கு நடிகர் ரஜினிகாந்த் இரங்கல் தெரிவித்துள்ளார்.
கல்லீரல் நோயால் பாதிக்கப்பட்டு கடந்த 15 நாள்களாக சிகிச்சைப் பெற்று வந்த மனோபாலா, சென்னையில் உள்ள அவரது வீட்டில் இன்று காலை உயிரிழந்தார்.
இவரது மறைவுக்கு திரைத்துறையினர், அரசியல் தலைவர்கள், ரசிகர்கள் எனப் பல்வேறு தரப்பினர் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.
இதையும் படிக்க | பிரபல இயக்குநர் மனோபாலா காலமானார்!
இந்நிலையில், நடிகர் ரஜினிகாந்த் வெளியிட்ட இரங்கல் பதிவில் கூறியிருப்பதாவது:
“பிரபல இயக்குநரும், நடிகருமான, அருமை நண்பர் மனோபாலாவுடைய இறப்பு எனக்கு மிகவும் வேதனை அளிக்கிறது. அவருடைய குடும்பத்தினருக்கு என்னுடைய அனுதாபங்கள். அவரது ஆத்மா சாந்தியடையட்டும்.”