மிகப்பெரிய பட்ஜெட்டில் உருவாகும் ‘விடாமுயற்சி’
நடிகர் அஜித் குமாரின் புதிய திரைப்படம் மிகப்பெரிய பட்ஜெட்டில் உருவாக உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
நடிகர் அஜித் குமாரின் புதிய திரைப்படம் மிகப்பெரிய பட்ஜெட்டில் உருவாக உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
துணிவு படத்தைத் தொடர்ந்து அஜித்தின் புதிய படத்தை யார் இயக்குவார் என்கிற எதிர்பார்ப்பு ரசிகர்கள் மத்தியில் இருந்து. அந்த எதிர்பார்ப்புக்கு அஜித் குமாரின் பிறந்தநாளை முன்னிட்டு கடந்த மே 1 ஆம் தேதி அவரின் புதிய படம் குறித்த அதிகாரபூர்வ அறிவிப்பு வெளியாகியுள்ளது.
இதையும் படிக்க: தோனி தயாரித்த தமிழ்ப் படத்தின் படப்பிடிப்பு நிறைவு!
அதன்படி அஜித்தின் அடுத்தப் படத்தை இயக்குநர் மகிழ் திருமேனி இயக்குவார் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் படத்துக்கு விடாமுயற்சி எனவும் தலைப்பு வைத்துள்ளன்ர். லைகா நிறுவனம் தயாரிக்கும் இந்த படத்துக்கு அனிருத் இசையமைக்கிறார். நிரவ் ஷா ஒளிப்பதிவு செய்கிறார்.
இந்நிலையில், இப்படம் மிகப்பெரிய பட்ஜெட்டில் உருவாக உள்ளதாகவும் பயணம் சார்ந்து படத்தின் கதை தயாராகியுள்ளதாகவும் புதிய தகவல் வெளியாகியுள்ளது.