வைரலாகும் சூது கவ்வும் -2 படத்தின் மோஷன் போஸ்டர் வெளியானது
கடந்த 2013ஆம் அண்டு விஜய் சேதுபதி நடிப்பில் சூது கவ்வும் திரைப்படம் வெளியானது.
செய்திகள்வைரலாகும் சூது கவ்வும் -2 படத்தின் மோஷன் போஸ்டர் வெளியானது
கடந்த 2013ஆம் அண்டு விஜய் சேதுபதி நடிப்பில் சூது கவ்வும் திரைப்படம் வெளியானது.
கடந்த 2013ஆம் அண்டு விஜய் சேதுபதி நடிப்பில் சூது கவ்வும் திரைப்படம் வெளியானது. இதில் சஞ்சிதா ஷெட்டி, ரமேஷ் திலக், அஷோக் செல்வன், பாபி சிம்ஹா, கருணாகரன், எம்.எஸ்.பாஸ்கர் ஆகியோர் நடித்திருந்தனர். இந்தப் படம் ரசிகர்களிடையில் பெரும் வரவேற்பைப் பெற்றது.
தற்போது இந்த படத்தின் இரண்டாம் பாகம் தயாராகி வருகிறது. இதில் நாயகனாக மிர்ச்சி சிவா நடித்து உள்ளார். படத்தின் முதல் பாகத்தை நலன் குமாரசாமி இயக்கி இருந்த நிலையில், இரண்டாம் பாகத்தை எஸ்.ஜே. அர்ஜுன் இயக்குகிறார். இந்த படத்தில் ஹரிஷா, ராதாரவி, கருணாகரன், எம்எஸ் பாஸ்கர், கராத்தே கார்த்தி, ரமேஷ் திலக், அருள்தாஸ் உள்ளிட்ட பலர் நடித்து உள்ளனர்.
இந்நிலையில், படத்தின் மோஷன் போஸ்டர் வெளியாகி சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.